ஹிந்துக்கள் யாத்திரை மீது தாக்குதல்

ராஜஸ்தான் மாநிலம் கமனில் உள்ள ஜுர்ஹெரா கிராமத்தில், மே 24 அன்று, ஹிந்துக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகவான் பரசுராமர் ஷோபா யாத்திரை, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கல் வீசித் தாக்கியதால், பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாத்திரையின் மத்தியில், ஒரு சமூகத்தைச் சேர்ந்த சில கடைக்காரர்கள், டி.ஜே பாடல்கள் அமைப்பில் உரத்த பாடல்கள் இசைக்கப்பட்டதை எதிர்த்தனர். ஹிந்துக்களும் ஒலியளவைக் குறைப்பதாக உறுதியளித்தனர். ஆனால், அதையும் மீறி கடைக்காரர்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த மேலும் சிலரிடம் இது குறித்து தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து யாத்திரை சென்றவர்கள் மீது கற்களை வீசியதுடன், தடிகளை பயன்படுத்தியும் தாக்கினர். இதில், ஷாஹீத் என்ற முஸ்லிம் காவலர், நிலைமையை கட்டுப்படுத்தி அமைதிப்படுத்த முயற்சிப்பதற்குப் பதிலாக, தாக்குதல் நடத்தியவர்களுக்கு தடிகளை வழங்கினார். இதையடுத்து, ஹிந்துக்கள் யாத்திரையை நிறுத்திவிட்டு காவல்துறைக்கு புகார் அளித்தனர். காவலர்கள் விரைந்து வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர். காவல்துறையும் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்தது. இதையடுத்து யாத்திரை நிறைவு பெற்றது. சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேகவால் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கையில், வாக்கு வங்கிகளுக்காக  குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஆதரவாக மட்டும் செயல்படும் மாநில ஆளும் கட்சியை கடுமையாக சாடினார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி, ஹிந்து சமுதாயத்தை சித்திரவதை செய்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.