சட்டத்தை காக்கும் பொறுப்பு ஆளுநருக்கு உண்டு

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்த பிறகு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “ஆளுநர் ஆர்.என். ரவியிடம் 2 கோரிக்கையை முன்வைத்துள்ளோம். காவல்துறையினர், கவுன்லசிலர் மற்றும் அமைச்சர்கள் முதல்வர் கட்டுப்பாட்டில் கீழ் இயங்குக்கின்றனர். அமைச்சர் ஒருவர் அரசியலமைப்பை மீறினால் ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம். மிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும். அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஆளுநர் ரவி நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் பாலாறு, தேனாறு போல கள்ளச்சாராய ஆறு ஓடுகிறது என ஆளுநரிடம் கூறியுள்ளோம். தமிழக பா.ஜ.க சார்பில் முதல்வர் ஸ்டாலினிடம் வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளோம். அந்த வெள்ளை அறிக்கையில், டாஸ்மாக்கை மூன்று ஆண்டுகளில் வரைமுறைப்படுத்துவது; எப்படி அதை குறைப்பது உள்ளிட்ட தகவல்கள் இடம் பெறும்” என கூறினார்.