இது பாசமா? எல்லாம் வேஷம்

ரிசர்வ் வங்கியின் 2,000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் முடிவு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கடந்த 2019ம் ஆண்டு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததையும், தற்போது 2,000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக வெளியான அறிவிப்பையும்  மையப்படுத்தி, “500 சந்தேகங்கள், 1,000 மர்மங்கள், 2,000 பிழைகள். கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்” என்று குறிப்பிட்டு மத்தியில் அட்சி செய்யும் பா.ஜ.க. அரசை குற்றம்சாட்டி இருக்கிறார். இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினின் பதிவிற்கு பதிலடி கொடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, “கள்ளச்சாராயத்தால் 22 மரணங்கள், உயிர் இழப்பிற்கு காரணமானவருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு, தி.மு.க.வினர் நடத்தும் சாராய ஆலைகள், டாஸ்மாக் வருமானம் 50,000 கோடி, இவை எல்லாம் மறைக்க நீங்கள் ஓடுவீர்கள் தமிழைத் தேடி. இது பாசமா? எல்லாம் வேஷம்” என்று குறிப்பிட்டுள்ளார்.