கர்நாடாக சட்டசபை தேர்தலில் வெர்றிபெர்ற காங்கிரஸ் 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றாலும் யார் முதல்வர் என்பதில் டி.கே சிவக்குமாருக்கும் சித்தராமையாவுக்கும் இடையே நிலவிய உட்கட்சி குழப்பத்தால் நீண்ட இழுபறி நீடித்தது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் உண்மையான தலைமையுடன் நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அக்கட்சி இன்று பதவியேற்கிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் முன்னாள் துணை முதல்வரான ஜி. பரமேஸ்வரா இந்த விவகாரத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சி மேலிடம்தான் முதல்வரையும் துணை முதல்வரையும் தேர்வு செய்துள்ளது. டி.கே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு மட்டுமே துணை முதல்வர் பதவி வழங்குவது சரியல்ல. கட்சியின் வெற்றிக்காக அனைவருமே பாடுப்பட்டிருக்கிறோம். இதில், அனைத்து சமூகத்தினரும் பங்கெடுத்துள்ளனர். அவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். முதல்வர் பதவியை நான் எதிர்பார்த்திருந்தேன். எனக்கு அவர்கள் துணை முதல்வர் பதவியாவது வழங்கியிருக்க வேண்டும்” என்றும் கூறி காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்தார். மேலும், “காங்கிரஸ் கட்சி மீது பட்டியல் சமூக மக்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். இந்த சமூகத்தை சேர்ந்தவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்காவிட்டால் வரும் நாட்களில் கட்சிக்குள் பெரும் பிரச்சனைகள் ஏற்படும். கட்சி மேலிடத்தில் இது குறித்து பேச உள்ளேன். தற்போதைக்கு முதல்வராகவும் துணை முதல்வராகவும் இருவரை கட்சி மேலிடம் அறிவித்துள்ளது, வரும் நாட்களில் அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என்பதை பார்ப்போம். அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அவர்கள் எங்களுக்காக என்ன செய்யப்போகிறார்கள் என்பதையும் பொருந்திருந்து பார்ப்போம்” என்று தெரிவித்தார். இந்த சூழலில், இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியளித்த டி.கே. சிவகுமார் நான் 100 சதவீதம் உறுதியாக சொல்கிறேன். அடுத்த 5 வருடங்கள் காங்கிரஸ் ஆட்சி கர்நாடகாவில் நடைபெறாது என கூறியுள்ளார். துணை முதல்வரின் இந்த கருத்து காங்கிரஸ் மேலிடத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஏற்கனவே, காங்கிரஸ் வெற்றிக்கு நாங்கள் தான் காரணம். எனவே எங்களுக்கு துணை முதல்வர் பதவி, நிதியமைச்சகம், உள்துறை உள்ளிட்ட 5 முக்கியத் துறைகள் ஒதுக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் போர்கொடி தூக்கியுள்ள நிலையில், இது காங்கிரஸ் தலைமைக்கு மற்றொரு புதிய தலைவலியாக மாறியுள்ளது.