தமிழகத்தில், ஸ்டாலின் தலைமையிலான விடியல் ஆட்சியில், ஹிந்துக்களின் கோயில்கள், பண்பாடு, கலாச்சாரம், விழாக்கள், வழிபாடுகள் எல்லாம் சிதைக்கப்பட்டு வருகின்றன. திராவிட மாடல் ஆட்சியில் பல ஹிந்து கோயில்கள் அத்துமீறி இடித்து தள்ளப்பட்டுள்ளதாக ஹிந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த சூழலில், தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில் ஒன்றில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். இந்த காணொளி, எங்கு எடுக்கப்பட்டது என்பது சரியாகத் தெரியவில்லை. அந்த காணொளி எடுத்தவரிடம் அவர்கள், ‘நாங்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள்தான், என்ன செய்ய முடியுமோ செய்து கொள்” என்று திமிராக பேசியிருக்கின்றனர். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இத்தகையவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா அல்லது தி.மு.கவின் இந்த ஆட்சியே கிறிஸ்தவர்கள் போட்ட பிச்சை தான் என்ற பாதிரி ஜார்ஜ் பொன்னையாவின் வார்த்தையை மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்குமா? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.