லைகா நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை

சென்னையில் லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் நேற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சமீபத்தில் இந்த நிறுவனம் தயாரித்த ‘பொன்னியின் செல்வன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சென்னையில், சென்னை தி நகரில் உள்ள லைகா நிறுவனத்தின் அலுவலகம் அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். துணை ராணுவத்தினரின் பாதுகாப்போடு அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.