செந்தில்பாலாஜியின் வேலை மோசடி வழக்கு

தற்போதைய தி.மு.க அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தபோது ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட வழக்கில், இந்த புகார் தொடர்பாக தொடக்கத்தில் இருந்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். தேவையெனில், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கலாம். செந்தில்பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கில் இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த மோசடி மூலமாக சட்ட விரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறையினரும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.