கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று விரைவில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளது. 2022 தேர்தலில் பஞ்சாபில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆசியமைத்த ஆம் ஆத்மி கட்சி இத்தேர்தலில், கர்நாடகாவில் அனைத்து இடங்களிலும் டெபாசிட்டை இழந்தது. ஆம் ஆத்மி கட்சி கர்நாடகாவில் 209 இடங்களில் போட்டியிட்டது. இதில் மொத்தமாக 2,25,419 வாக்குகள் (0.58 சதவீதம்) மட்டுமே அக்கட்சிக்கு கிடைத்துள்ளது. இத்தேர்தலில், இந்திய மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி 0.2 சதவீத வாக்குகளையும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி 0.06 சதவீத வாக்குகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்லெனின்) 0.00 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று தங்களது உண்மை பலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன. மேலும், இத்தேர்தலில் 16 தொகுதிகளில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் வேட்பாளர்களில் 15 பேர் சொற்ப வாக்குகளை பெற்று டெபாசிட்டை இழந்தனர். ஒருவர் மட்டுமே சுமார் 25 சதவீத வாக்குகளை பெற்றார். பாரதிய யுவமோர்ச்சா தலைவர் பிரவீன் நெட்டாரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள புத்தூர் வேட்பாளர் ஷாபி பெல்லாரே எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் போட்டியிட்டு 3,000 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். முன்னதாக, பிரவீன் நெட்டாரு கொலை வழக்கில் பெல்லாரேவை தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) கைது செய்து விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. எஸ்.டி.பி.ஐ கட்சி என்பது தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பி.எப்.ஐI) அரசியல் பிரிவாக கருதப்படுகிறது. முன்னதாக, இக்கட்சியினர் காங்கிரசுக்கு உதவ 100 இடங்களில் தங்களது வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என்று அறிவித்திருந்தனர். இதேபோல அசாசுதீன் ஒவைசியின் கட்சியினர் போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் மிக சொற்ப வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினர்.