பாதுகாப்புத் துறையில் ‘‘தற்சார்பு இந்தியா’’வை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் இறக்குமதியைக் குறைப்பதற்கும், ரூ. 715 கோடி மதிப்புள்ள இறக்குமதி மானியத்துடன் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 928 உடனடி மாற்றுக் கருவிகள், துணை அமைப்புகள், உதிரி பாகங்கள் கொண்ட 4வது ஆக்கபூர்வ உள்நாட்டுமயமாக்கல் பட்டியலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சாதனங்களின் விவரங்கள் ஸ்ரீஜன் இணையப்பாக்கத்தில் (https://srijandefence.gov.in/) கிடைக்கின்றன. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவிற்குப் பிறகே இவை பாரதத் தொழில்துறையிலிருந்து கொள்முதல் செய்யப்படும். இந்த நான்காவது உள்நாட்டு மயமாக்கல் பட்டியல் (பி.ஐ.எல்) மாற்றுக் கருவிகள், துணை அமைப்புகள், உதிரி பாகங்கள் தொடர்பாக 2021 டிசம்பர், 2022 மார்ச், 2022 ஆகஸ்ட் என ஏற்கனவே வெளியிடப்பட்ட மூன்று பட்டியல்களின் தொடர்ச்சியாகும். ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியல்களில் 2,500 சாதனங்கள் உள்நாட்டுமயம் ஆக்கப்பட்டுள்ளன. மேலும் 1,238 சாதனங்கள் குறிப்பிட்ட காலவரம்புக்குள் உள்நாட்டுமயம் ஆக்கப்படவுள்ளன. இவற்றில் 310 சாதனங்கள் (முதல் பி.ஐ.எல் – 262, 2வது பி.ஐ.எல் – 11, 3வது பி.ஐ.எல் – 37) இதுவரை உள்நாட்டுமயம் ஆக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்ட இந்தப் பொருட்களுக்கான கொள்முதல் நடவடிக்கையை பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் விரைவில் தொடங்கும். இந்த நோக்கத்திற்காகவே தனியாக வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்ரீஜன் இணையப்பக்க தகவல்பலகையை ஆர்வ வெளிப்பாட்டுக்கும், முன்மொழிவுக்கான கோரிக்கைகளுக்கும் தொழில்துறையினர் காணலாம்; அதிக எண்ணிக்கையில் பங்கேற்க முன்வரலாம்.