திரைப்பட இயக்குனருக்கு மிரட்டல்

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்தே அந்த படத்துடன் தொடர்புடையவர்களை மிரட்டும் பல முயற்சிகள் நடந்து வருகின்றன. அவ்வகையில் இப்போது அந்த படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென்னுக்கு புதிய மிரட்டல் வந்துள்ளது. ‘ஹக் இ ஹிந்துஸ்தான்’ என்ற ஒரு முஸ்லிம் அமைப்பின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள மிரட்டலில், இயக்குனர் சுதிப்தோ சென்னின் கண்களைப் பறிப்பவர்களுக்கு ரூ. 21 லட்சம் பரிசு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவர் தமன்னா ஹாஷ்மி, இந்த படத்தின் மூலம் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. படம் ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதல் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என கூறினார். ஷாஹீத் குதிராம் போஸ் நினைவிடத்திற்கு அருகில் இந்த குழு உறுப்பினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. முன்னதாக, படத்தின் குழு உறுப்பினர் ஒருவருக்கு ஒரு தெரியாத எண்ணிலிருந்து ஒரு மிரட்டல் செய்தி வந்தது, அதில் “வீட்டை விட்டு தனியாக வெளியே செல்ல வேண்டாம். இந்தக் திரப்படத்தால் நீங்கள் நன்மை எதுவும் செய்யவில்லை” என கூறப்பட்டு இருந்தது. சுதிப்தோ சென் இதுகுறித்து மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். காவல்த்குறை அவருக்கு பாதுகாப்பு அளித்துள்ளது. அதேபோல, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்க்கச் சென்றவர்களுக்கு இலவச ஆட்டோ சவாரி வழங்கிய ஆட்டோ ஓட்டுநரான சாது மகருக்கு பாரதம் மற்றும் பல வெளிநாடுகளில் இருந்து தலை துண்டிப்பு உள்ளிட்ட பல கொலை மிரட்டல்கள் வந்ததால் அவருக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டது.