தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ம் தேதி தி.மு.க தலைவர்கள் சிலரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். நாட்டையே உலுக்கிய இந்த பட்டியல் தொடர்பாக, தி.மு.க அரசின் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில், சொத்து பட்டியல் விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மீது தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலு அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் தாக்கல் செய்யப்பட்ட இந்த அவதூறு வழக்கில், அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாக அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஸ்டாலின் சார்பில் சமீபத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட சூழலில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.