காஷ்மீரில் ஜி 20 மாநாட்டை நடத்துவதற்கான ஆட்சேபனைகளை பாரதம் முற்றிலும் நிராகரித்துள்ள நிலையில், சிறையில் உள்ள பயங்கரவாதியும் பிரிவினைவாத தலைவருமான யாசின் மாலிக்கின் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜே.கே.எல்.எப்) இந்த மாத இறுதியில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜி20 உயர்மட்ட கூட்டத்தை நடத்துவதற்கு எதிராக ஜி20 நாடுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஜம்மு காஷ்மீர் தனது ஒருங்கிணைந்த பகுதி என்றும், பாரதத்துக்கு எங்களது பிராந்தியத்தில் எந்த நிகழ்ச்சியையும் நடத்த உரிமை இல்லை என்றும் பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் கூறிவருகிறது. பல பயங்கரவாத அமைப்புகளும் ஜி 20 கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சீர்குலைக்க முயற்சித்தன. இந்த சூழலில் இந்த தடை ஏற்படுத்தும் மற்றொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜே.கே.எல்.எப் தலைமை செய்தித் தொடர்பாளரும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஹம்மது யாசின் மாலிக்கின் சிறப்புப் பிரதிநிதியுமான முகமது ரபிக் தார், ஜி20 தலைவர்களுக்கு விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக கூறினார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மே 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பாரதம் இந்த கூட்டத்தை நடத்துவது தேச விரோத நிகழ்ச்சி நிரல். காஷ்மீர் ராணுவ மண்டலமாக மாற்றும் போது, கடந்த பல ஆண்டுகளாகவே இங்கு நிர்ப்பந்தத்தில் உள்ள உள்ளூர் மக்களின் வாழ்க்கை மேலும் பரிதாபமாக மாறியுள்ளது. சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்துவதன் மூலம் தனது மறைக்கப்பட்ட நோக்கங்களை அடைய பாரதம் முயற்சிக்கிறது” என கூறினார்.மேலும், ஜம்மு காஷ்மீரில் மே 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் முழு அடைப்பை கடைப்பிடிக்குமாறும், மக்கள் போராட்டங்களை நடத்துமாறும் கோரிக்கை விடுத்தார். ஆனால், ஜம்மு காஷ்மீர், வரலாற்று சிறப்புமிக்க இந்த ஜி 20 கூட்டத்தை சிறப்பாக நடத்த தயாராகி வருகிறது. உள்ளூர் மக்களுடன் இணைந்து யூனியன் பிரதேச அரசு, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை இதில் இணைந்து ஈடுபட்டுள்ளன.