கர்நாடக மக்களுக்கு பிரதமர் கடிதம்

கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், கர்நாடக மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வெளிப்படையான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “என் மீது நீங்கள் எப்போதும் அன்பும், பாசமழையும் பொழிந்தீர்கள். அது எனக்கான ஒரு தெய்வீக ஆசீர்வாதமாக நான் உணர்ந்தேன். நமது தேசத்தின் அமிர்த மகோத்சவ காலத்தில், பாரத மக்களாகிய நாம், நம்முடைய அன்பிற்குரிய நாட்டை ஒரு வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவதற்கான நோக்கங்களை நாம் கொண்டிருக்கிறோம். அந்த தொலைநோக்கு பார்வையை உணரும் வகையில், இந்த இயக்கம் முன்னெடுத்து செல்லப்படுவதில் கர்நாடகா ஆர்வமுடன் உள்ளது. உலகில் 5வது பெரிய பொருளாதார நாடாக பாரதம் உள்ளது. நம்முடைய அடுத்த இலக்கு டாப் 3க்குள் வரவேண்டும் என்பது தான். இதற்கு, ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதாரத்தில் விரைவாக கர்நாடகா வளரும்போது தான் அது சாத்தியப்படும். கொரோனா பெருந்தொற்று காலத்தில், பா.ஜ.க. அரசின் கீழ், வருடத்திற்கு அந்நிய முதலீடாக ரூ. 90 ஆயிரம் கோடி கர்நாடகாவுக்கு கிடைத்தது. ஆனால், அதற்கு முந்தின அரசின் கீழ் அது 30 ஆயிரம் கோடி ரூபாயாகவே இருந்தது. கர்நாடகாவை முதலீடு, தொழிற்சாலை மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் முதல் மாநிலமாக உருவாக்குவதுடன், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் ஆகியவற்றிலும் முதல் மாநிலமாக உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளா