டெல்லியின் ஜிபி பந்த் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த 40 வயதான ஷஷி ஜாதவ் என்ற ஹிந்து பெண் ஒருவர் ஷகிர் என்ற குற்றவாளியால் 1 மே 2023 அன்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவரது அந்தரங்க உறுப்புகளில் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் 7 மே 2023 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் அந்தரங்க பகுதிகளில் அந்த கொடூர குற்றவாளி கம்பியை செருகியதாகவும் அது அவரது குடல் பகுதிவரை சென்றதாகவும் அந்த பெண்ணின் மகன் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் காவல்துறையினர் அதை மறுத்துள்ளனர். குற்றவாளி அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பை எட்டி உதைத்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் வழக்கு விசாரணை நடந்து வருகிறது என்றனர். எனினும், அவரது பிறப்புறுப்பிலும் தலை உள்ளிட்ட உடலின் மற்ற பாகங்களில் காயங்கள் இருப்பதை அவர்கள் உறுதி செய்தனர். ஷஷி ஜாதவ், கிழக்கு டெல்லி மாவட்டத்தில் நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வந்தார். இவர் ஜிபி பந்த் மருத்துவமனையில் தினமும் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை ஒப்பந்ததாரர் மூலம் பணிபுரிந்து வந்தார். அந்த பெண்ணின் கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். மே 1ம் தேதி, அவர் தனது பணிகளை முடித்த பிறகு, ஷகிர் அவரை மருத்துவமனையில் தங்கச் சொன்னார். அதன் பிறகு, கனமான பொருளால் தலையில் அடித்து, பற்களை உடைத்தார். இதனால் மயக்கமடைந்த அந்த பெண்ணை பலாத்காரம் செய்தார். பின்னர், அங்கிருந்து தப்பியோடியுள்ளார். மறுநாள் காலையில் தான் அந்த பெண்ணை சக ஊழியர்கள் பார்த்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த பெண்ணிடம் வாக்குமூலம் பெற்ற காவல்துறையினர், ஜில்மில் என்ற பகுதியில் இருந்து பகுதியில் மறைந்திருந்த ஷகிரை கைது செய்தனர். இதற்கிடையில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர். பீம் ஆர்மி என்ற அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவணன் என்பவர், தான் ஜாதவ் சமூகத் தலைவர் என்று கூறிக்கொண்டு உதவுவதாக அங்கு வந்தார். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் ஷகிர், அவர் ஒரு முஸ்லிம் என்பதை அறிந்ததும் அவர் பின்வாங்கினார் என்றும் ஹிந்து ஆர்வலர் ஒருவர் குற்றம் சாட்டினார்.