டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீடு புதிப்பிக்க ரூ. 45 கோடி செலவிடப்பட்டதாக கடும் சர்ச்சைகள் எழுந்தன. அவரது வீடு புதுப்பித்தலுக்காக, திரைச்சீலைகள் உட்பட பல பொருட்களும் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்டது. இதற்காக செலவிடப்பட்ட மக்களது வரிப்பணம் 45 கோடி ரூபாய் என கூறப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தன்னை மிகவும் எளிமையான மனிதர் போல வெளியில் காட்டிக் கொண்டு வேஷம் போடும் அரவிந்த் கெஜ்ரிவால், மக்கள் முன்னிலையில் நாடகமாடி வருகிறார். எளிமையான வாழ்க்கையை விரும்புபவர், எதற்காக கோடி கோடியாக மக்களின் வரிப்பணத்தை வாரி இறைத்து தன் பங்களாவை புதுப்பிக்க வேண்டும்? என பா.ஜ.கவும் காங்கிரசும் கேள்வி கேட்டு வருகின்றன. அரசு கஜானாவை காலியாக வைத்து விட்டு தனது இல்லத்தை அரண்மனை போல புதுப்பிக்கும் கெஜ்ரிவாலுக்கு டெல்லி மக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரண்மனை போல புதுப்பிக்கப்பட்ட அவரது இல்லத்தின் புகைப்படங்களை டெல்லி பா.ஜ.க சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த சூழலில், அரவிந்த் கெஜ்ரிவாலின் வீடு புதுப்பித்தலுக்காக செலவிடப்பட்டது 45 கோடி ரூபாய் அல்ல, 171 கோடி ரூபாய் என காங்கிரஸ் மற்றொரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில், மருத்துவமனை படுக்கைகளுக்காகவும், ஆக்சிஜன்களுக்காகவும், மக்கள் அல்லாடிக் கொண்டிருந்த நேரத்தில், தனது பங்களாவை அரவிந்த் கெஜ்ரிவால் புதுப்பித்துள்ளார். அரவிந்த கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ அரசு பங்களாவுக்கு அருகே, அரசு இல்லங்கள் அடங்கிய நான்கு வளாகங்கள் உள்ளன. இந்த நான்கு வளாகங்களிலும் சேர்த்து, 22 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு, டில்லி அரசு உயர் அதிகாரிகள் வசிக்கின்றனர். அந்த 22 வீடுகளில், 15 வீடுகள் காலி செய்யப்பட்டன, சில வீடுகள் இடிக்கப்பட்டன. அதற்கு மாற்றாக, காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில், 126 கோடிரூபாய் செலவில், 21 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் அரசு செலவில் வாங்கப்பட்டன. கெஜ்ரிவாலின் பங்களாவை புதுப்பிக்கும் பணியின் ஒரு பகுதியாகவே, ஏற்கனவே இருந்த அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டு புது வீடுகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த, 21 வீடுகளுக்கு ஆன செலவு 126 கோடி ரூபாய். இதையும் கெஜ்ரிவால் பங்களாவின் புதுப்பிப்பு செலவில் சேர்க்க வேண்டும். டெல்லி அரசு நிறைவேற்றிய பட்ஜெட்டில் முதல்வரின் இல்லம் புதுப்பிக்கப்பட உள்ளதை பற்றி குறிப்பிடப்படவில்லை. எனவே, இது சிறப்புரிமை மீறல் ஆகும் என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், முதல்வர் கெஜ்ரிவால் மீது பல்வேறு குற்றச் சாட்டுகளை சுமத்தி டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு கடிதம் எழுதியுள்ளார் அதில், “அரவிந்த் கெஜ்ரிலாலின் புதுப்பிக்கப்பட்ட பங்களாவில் உள்ள விலை உயர்ந்த கட்டில், மெத்தை, சோபா, டைனிங் டேபிள் உள்ளிட்டவை எல்லாம் என் சொந்த செலவில் லாங்கி கொடுக்கப்பட்டது. இவற்றை அரவிந்த கெஜ்ரிவாலும் முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினும் தேர்வு செய்து தெரிவித்தனர். பெரும்பாலான மரச் சாமான்கள் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அவர் வீட்டில் உள்ள 12 பேர் அமர்ந்து சாப்பிட கூடிவ டைனிங் டேபிள், 40 லட்ச ரூபாய் மதிப்புடையது கெஜ்ரிவால் மற்றும் அவரது குழந்தைகளின் அறைகளில் உள்ள, டிரெஸ்ஸிங் டேபிள்கள் 24 லட்ச ரூபாய் மதிப்புடையது, முதம் பார்க்கும் கண்ணாடிகள், 18 லட்சம் ரூபாய், 45 லட்ச ரூபாய்க்கு சுவர் கடிகாரங்கள் உள்ளிட்டவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இறக்குமதி செய்யப்பட்டன. இவை அனைத்துக்கும் எனது நிறுவனங்களின் பெயரில் தான் பணம் அளிக்கப்பட்டது. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன” என தெரிவித்துள்ளார். இதனிடையே, பங்களா புதுப்பிப்பு பணிக்கான செலவு குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யும்படி, தலைமை செயலர் நரேஷ் குமாருக்கு, புதுடில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.