பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி

ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டின் பாஸ்டில் தின அணிவகுப்பில் இம்மானுவேல் மேக்ரானின் கெளரவ விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரதமர் நரேந்திர மோடியை ஜூலை 14ம் தேதி தங்களது பாரம்பரிய ராணுவ அணிவகுப்பான பாஸ்டில் தின அணிவகுப்பில் கெளரவ விருந்தினராக கலந்துகொள்ள விடுத்த அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டார் என பிரான்ஸ் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான மிக முக்கிய கூட்டுறவின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி பிரதமர் மோடியின் இந்த பயணம் அமையும். இந்த வரலாற்றுப் பயணம், காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைதல் போன்ற நமது காலத்தின் பெரிய சவால்களை எடுக்க கூட்டு முயற்சிகளை அனுமதிக்கும் என்று அதன் அறிக்கை கூறியுள்ளது. இந்த அளிவகுப்பில், பிரெஞ்சுப் படைகளுடன் இனைந்து பாரத ராணுவமும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.