ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வரும் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து அபுதாபி செல்வதற்காக பினராயி விஜயன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டிருந்தார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சஜம், அந்த மனுவை ஆய்வு செய்தது. பின்னர், முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொள்ளும் அளவுக்கு அந்த முதலீட்டாளர்கள் சந்திப்பு மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என தெரிவித்து பினராயி விஜயனின் அபுதாபி பயணத்துக்கு அனுமதி மறுத்துள்ளது.