தமிழக அரசுக்கு நோட்டீஸ்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சமீபத்தில், ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இல்லாத சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணங்கள் நடைபெற்றதாக புகார் அளிக்கப்பட்ட விவகாரத்தில், அந்த சிறுமியர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு சட்டத்துக்கு புறம்பாக, வலுக்கட்டாயமாக கன்னித்தன்மை சோதனை (இரட்டை விரல் சோதனை) செய்யப்பட்டது. இதுகுறித்து, முதலமைச்சருக்கு தாம் கடிதம் அனுப்பியுள்ளதாக கூறினார். ஆளுநரின் இந்த கருத்தைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், ஆளுநரின் புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஏழு நாட்களுக்குள் அறிக்கை அனுப்புமாறு தலைமைச் செயலாளருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.