கர்நாடகாவில் இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். கூட்டத்தில் பேசிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, “மத அடிப்படையில் இடஒதுக்கீடு இருக்க முடியாது, ஆனால், காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவே விரும்புகிறது. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று பாபாசாகேப் அம்பேத்கர் கூறியிருந்தார். இதுதான் நமது அரசியலமைப்பின் அடிப்படை. ஆனால், இன்று காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவோம் என்று சொல்கிறது. கர்நாடக பா.ஜ.க இந்த விஷயத்தில் மிகவும் துணிச்சலான உறுதிப்பாட்டை எடுத்துள்ளது. மேலும், இது நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நாடு தழுவிய கோரிக்கையை முன்வைக்கும். நாடு தழுவிய தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) காலத்தின் தேவை. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை என்பது, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான பி.எப்.ஐ அமைப்பின் தேர்தல் அறிக்கை போல தெரிகிறது” என்று கூறினார்.