ஹிந்து பையனுடன் ஏன் பேசுகிறாய்?

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில், ஒரு ஹிந்து ஆணுடன் சாதாரணமாக பேசியதற்காக, ஒரு முஸ்லிம் கல்லூரி மாணவியை அப்பகுதியில் உள்ள முஸ்லிம் இளைஞர்களும் சிறுவர்களும் துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் திங்கள்கிழமை நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து வெளிச்சத்திற்கு வந்தது. பர்தா அணிந்து கல்லூரிக்குச் செல்லும் அந்த பெண், வேற்று மதத்தைச் சேர்ந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, சில முஸ்லிம் இளைஞர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி, வேறு சமூகத்தைச் சேர்ந்த பையனுடன் ஏன் நடந்து செல்கிறாய், ஹிந்து பையனுடன் ஏன் பேசுகிறாய்? என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர். பிறகு, அவரது அலைபேசியையும் பறித்துச் சென்றனர். ஒரு இளைஞன் அந்த பெண்ணின் தலையில் அணிந்துள்ள ஹிஜாபை கழற்ற முயன்றார். ஓரு நபர் அந்த பெண்ணின் புத்தகப் பையை இழுத்தார். இதில், அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், முஸ்லிம் மதத்தை சேர்ந்த இளைஞர்கள் இப்படி மூர்கத்தனமாக அந்த பெண்ணை பொதுஇடத்தி வைத்து பலரின் முன்னிலையில் துன்புறுத்தியபோதும், ​​யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை. ‘இந்த வீடியோ காவல்துறையின் கவனத்திற்குச் சென்றதையடுத்து அவர்கள் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது பெற்றோரிடம் பேகம்புரா காவல் நிலையத்தில் ஆஜராகி புகார் அளிக்குமாறு காவல் துறையினர் கூறியபோது அவர்கள் புகார் அளிக்க மறுத்துவிட்டனர். எனினும், காவல்துறை தானாக முன்வந்து புகார் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்று  காவல்துறை துணை ஆணையர் தீபக் கிர்ஹே கூறினார்.