விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சின்ன கொல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் சாமுவேல். இவர், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தமிழ் கிறிஸ்துவ லூத்தரன் சர்ச் (TELC) பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது, தாமஸ் சாமுவேல் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து 9 மாணவிகள் அளித்த புகாரின் பேரில், கடந்த 2022ம் ஆண்டு தாமஸ் சாமுவேலை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேல் குற்றவாளி என்று அறிவித்ததோடு, அவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.