ஹிஜாபை விட கல்வியை தேர்ந்தெடுத்தேன்

ஏப்ரல் 21, 2023 அன்று, கர்நாடகாவின் 2வது பி.யு.சி முடிவுகள் 2023 வெளியிடப்பட்டது. அதில், அதிக மதிப்பெண் பெற்றவர்களில் தபசும் ஷேக், 600க்கு 593 மதிப்பெண்கள் பெற்று ஆர்ட்ஸ் ஸ்ட்ரீமில் முதலிடம் பிடித்தார். முடிவுகள் வெளியான பிறகு ஊடகங்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் சமீபத்திய ஹிஜாப் சர்ச்சையைக் குறிப்பிட்டு, நன் ‘ஹிஜாபை விட கல்வியை’ தேர்வு செய்ய விரும்பினேன் என கூறினார். மேலும், “நீதிமன்ற உத்தரவு வரும் வரை தினமும் ஹிஜாப் அணிந்து தான் அனைத்து வகுப்புகளிலும் கலந்து கொண்டேன். ஆனால், எனது படிப்பை மேலும் தொடர வேண்டும் என்ற விருப்பமும், எனது பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொண்ட சட்டத்தை மதிக்கும் படிப்பினைகளும் தான் நான் ஹிஜாப் அணிவதை நிறுத்த முடிவெடுக்கத் தூண்டின. எனது பெற்றோரும் முழு மனதுடன் என்னை ஆதரித்தனர். எனது தந்தை அப்துல் காம் ஷேக் நாட்டின் சட்டத்தைப் பின்பற்றுவது முக்கியம். குழந்தைகளுக்கு கல்விதான் முக்கியம் என தெரிவித்தார். அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளை பின்பற்றுவேன். வெளியில் ஹிஜாப் அணிந்து செல்லும் நான், கல்லூரி வளாகத்தில் எனது ஹிஜாபை அகற்றிவிடுவேன். நான் முதலிடம் பெற்ற நாளில், ஹிஜாப் அணிந்து தான் முதல்வரைச் சந்தித்தேன். எனது முடிவை யாரும் எதிர்க்கவில்லை” என கூறினார். இருப்பினும், சில முஸ்லிம் அடிப்படைவாதிகள், இடதுசாரி மனப்பான்மை கொண்டவர்கள் மற்றும் தாராளவாதிகள், அவர் ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதி முதலிடம் பெற்றதாகக் கூற அவரது கருத்துக்களைத் திரிக்க முயன்றனர். சமூக ஊடகங்களில் கல்வி வளாகங்களில் பர்தா மற்றும் ஹிஜாப் அணிவதை இடைவிடாமல் ஆதரிக்கும் இவர்கள், இத்தகைய போலிச் செய்திகளைப் பரப்புவதற்காக ஹிஜாப் அணிந்த அந்த மாணவியில் புகைப்படங்களை தேடியெடுத்து வெளியிட்டனர். ஹிஜாப் அணிந்ததால் அவர் பள்ளியில் சிரமத்தை எதிர்கொண்டாலும் தேர்வில் முதலிடம் பிடித்தார் என்று குறிப்பிட்டுள்ளனர். திட்டமிட்ட வகையில், மாணவியின் கருத்தை புறக்கணித்தனர்.

இதில் சில முக்கிய பிரபலங்களும் அடங்குவார்கள். ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது செய்தியில், “ஹிஜாப் தலையை மறைக்கிறது, மூளையை அல்ல. வாழ்த்துகள் தபசும் ஷேக். கர்நாடகாவில் ஹிஜாப் தடையால் பாதிக்கப்பட்ட தபசும் ஷேக் மாநில வாரியத் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார். தொல்லைகள் மற்றும் எதிர்ப்புகள் இருந்தபோதிலும், அவர் கல்வியைத் தொடர்ந்தார் 12ம் வகுப்பு பி.யு.சி தேர்வில் 98.3% உடன் முதல் மதிப்பெண் பெற்றார்” என கூறியுள்ளார். இதே படத்தை பாரதத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த டாக்டர் எஸ்.ஒய் குரேஷியும் பகிர்ந்துள்ளார். குரேஷி ‘மக்கள்தொகை கட்டுக்கதை: இஸ்லாம், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் இந்தியாவில் அரசியல்’ என்ற புத்தகத்தை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. என்.டி.டி.வி பத்திரிக்கையாளர் ஸ்வாதி சதுர்வேதியும் அந்த படத்தைப் பகிர்ந்துகொண்டு, “மிகவும் சிறப்பாக செய்தீர்கள் தபசும், நீங்கள் எதிர்கொண்ட துன்புறுத்தலுக்கு வருந்துகிறேன். எனினும் நீங்கள் நட்சத்திரம் போல் கடந்து வந்தீர்கள்” என்று பதிவிட்டுள்ளார். பிரபல வழக்கறிஞர் சோம்நாத் பார்தி தனது டுவிட்டர் சுயவிவரத்தின் காட்சிப் பெயரில் ‘மனிதநேயத்தை விட பெரியது எதுவுமில்லை’ என்றும் இந்தப் படத்தைப் பகிர்ந்துகொண்டு, “மனமார்ந்த வாழ்த்துகள் தபசும்! மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் சம்பந்தமாக இருக்க விரும்புபவர்களின் வாயை அடைப்பதற்கு இதைவிட சிறந்த வழி இல்லை! நன்றாக முடிந்தது!” என கூறியுள்ளார்.