போதைப்பொருள் ஒழிப்பு முயற்சிக்கு பாராட்டு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசம் போதை பொருட்களுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கிறது. இன்று நடைபெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் (ஏ.என்.டி.எப்) தலைவர்களின் முதல் தேசிய மாநாடு, பாரதத்தின் கூட்டுப் பலத்துடன் ஆபத்தை எதிர்த்துப் போரிட முழு அரசாங்க அணுகுமுறையின் வெளிப்பாடாகும்” என்ற டுவிட்டர் செய்திக்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, “சமூகத்தில் போதைப் பொருட்களால் ஏற்படும் முடிவுகட்டுவதில் ஒருங்கிணைப்பையும் செயலூக்கத்தையும் கொண்டுவந்திருப்பது நல்ல முன்முயற்சியாகும்” என தெரிவித்துள்ளார்.
அஞ்சு பாபி ஜார்ஜின் கட்டுரை: நாட்டின் விளையாட்டு சாதனைகளை கொண்டாடுவதற்கான ஒரு தளமாக மனதின் குரல் உருவாகி இருப்பது குறித்து பாரதத்தின் தடகள விளையாட்டுகள் சம்மேளனத்தின் துணைத் தலைவர் அஞ்சு பாபி ஜார்ஜ் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பிரதமர் தனது டுவிட்டர் பதிவில், “நாட்டின் விளையாட்டு சாதனைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர #மனதின் குரல் எவ்வாறு ஒரு தளமாக உருவாகியுள்ளது என்பது பற்றி இந்தியத் தடகள விளையாட்டுகள் சம்மேளனத்தின் துணைத் தலைவர் அஞ்சு பாபி ஜார்ஜ் @anjubobbygeorg1 எழுதியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.
மா காமாக்யா சரக்குப் போக்குவரத்து வழித்தடம்: காசி விஸ்வநாத் தாம், ஸ்ரீ மகாகால் மகாலோக் சரக்குப்போக்குவரத்து வழித்தடம் போன்று மா காமாக்யா சரக்குப் போக்குவரத்து வழித்தடம் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுப்பிக்கப்பட்ட மா காமாக்யா சரக்குப் போக்குவரத்து வழித்தடம் எவ்வாறு எதிர்காலத்தில் சிறந்ததாக இருக்கும் என்ற கருத்தை அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா டுவிட்டர் செய்தியில் பகிர்ந்திருந்தார். அவரது இந்த செய்திக்கு பதிலளித்துள்ள பிரதமர், “மா காமாக்யா சரக்குப்போக்குவரத்து வழித்தடம் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆன்மிக அனுபவத்தை பொறுத்தவரை காசி விஸ்வநாத் தாம், ஸ்ரீ மகாகால் மகாலோக் சரக்குப் போக்குவரத்து வழித்தடம் ஆகியவை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு இணையான முக்கியத்துவம் என்னவென்றால், சுற்றுலா விரிவடைந்துள்ளது. உள்ளூர் பொருளாதாரம் ஊக்கம் பெற்றுள்ளது” என தெரிவித்துள்ளார்.
சூரத் சேலை வாக்கத்தான்: சூரத் பொலிவுறு நகர மேம்பாட்டு லிமிட்டெட் மற்றும் சூரத் நகராட்சி சார்பில் ‘சூரத் சேலை வாக்கத்தான்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தர்ஷனா ஜர்தோஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுக்கு பதில் அளித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், “பாரதத்தின் ஜவுளி பாரம்பரியத்தை பிரபலமடையச் செய்வதற்கான மிகச்சிறந்த முயற்சி சூரத் சேலை வாக்கத்தான்” என குறிப்பிட்டுள்ளார்.
பி.டி.பி என்.இ.ஆர் திட்டம்: பி.டி.பி என்.இ.ஆர் திட்டத்தின் நோக்கம் பொருள்களின் கொள்முதல், சரக்குப் போக்குவரத்து, சந்தைப்படுத்துதலில் திறமையை விரிவாக்குவதன் மூலம் பழங்குடியின கைவினைக் கலைஞர்களுக்கான வாழ்வாதார வாய்ப்புகளை வலுப்படுத்துவது என்று மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “வடகிழக்கைச் சேர்ந்த திறமைமிக்கக் கைவினைஞர்களின் வாழ்க்கை மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட வடகிழக்கு பழங்குடி மக்கள் உற்பத்தி பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதற்கான சந்தைப்படுத்துதல் மற்றும் சரக்குப்போக்குவரத்து (பி.டி.பி என்.இ.ஆர்) திட்டம் மகத்தானதாகும். வடகிழக்கைச் சேர்ந்த பொருட்களுக்கு சிறந்த பார்வையையும் இந்தத் திட்டம் உறுதிசெய்யும்” என்று கூறினார்.
அபிலேக் படால் இணையப்பக்கம்: தேசிய ஆவணக் காப்பகத்தின் இணையதளத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான வரலாற்று ஆவணங்களைக் கொண்ட “அபிலேக் படால்” எனும் இணையப்பக்கத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். தேசிய ஆவணக்காப்பகத்தின் டிவிட்டர் பதிவுக்கு பதில் அளித்துள்ள பிரதமர் தமது டிவிட்டர் பதிவில், “வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்து பேரார்வம் கொண்டவர்களுக்கு இது நிச்சயம் ஆர்வத்தை அளிக்கும்” என பாராட்டியுள்ளார்.
புதிய பயணிகள் ரயில்: கோண்டியா குடியிருப்பு வாசிகளுக்கான ஜபல்பூர் கோண்டியா ஜபால்பூர் இடையேயான புதிய பயணிகள் ரயில் சேவை வெற்றி பெற பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து சுனில் மெந்தே வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுக்கு பிரதமர் பதில் அளித்து வெளியிட்டுள்ள பதிவில், “நான் வாழ்த்துகிறேன். ஜபல்பூர் கோண்டியா இடையேயான இந்த புதிய ரயில், இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை அளிக்கும் மிகப் பெரிய பரிசு” என தெரிவித்துள்ளார்.