ராகுல் காந்தி மீது கிரிமினல் அவதூறு புகார்

சமீபத்தில் லண்டனில் சென்று பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அங்கும் மாபெரும் சுதந்திர்ட போராட்ட வீரரான வீர் சாவர்க்கரை அவதூறு செய்தார். இந்த சூழலில், வீர் சாவர்க்கரின் பேரன் சாத்யகி சாவர்க்கர், ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு ஒன்றை நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார். வீர் சாவர்க்கரின் சகோதரரின் மகனான சாத்யகி, ராகுல் காந்தி பொதுமக்களிடம் பேசும் வீடியோவை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், எனது தாத்தா மறைந்த விநாயக் தாமோதர் சாவர்க்கரை அவதூறு செய்த ராகுல் காந்தி மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் 499 மற்றும் 500 பிரிவுகளின் கீழ் எனது வழக்கறிஞர்கள் நகர நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நீதிமன்ற அதிகாரி இன்று அங்கு இல்லாததால், வழக்கின் எண்ணைப் பெற சனிக்கிழமை மீண்டும் வரும்படி கூறினார்கள். எங்களுக்கு இன்னும் வழக்கு எண் கிடைக்கவில்லை, சனிக்கிழமை அதைப் பெறுவோம்” என்று கூறினார்.

ராகுல் மீதான புகார் குறித்து சாத்யகி சாவர்க்கர் கூறுகையில், “ராகுல் காந்தி ஒரு கூட்டத்தில் பேசுகையில், வீர் சாவர்க்கர் ஒரு புத்தகத்தை எழுதியதாகக் கூறினார், அதில் சாவர்க்கர் தனது ஐந்து முதல் ஆறு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு முஸ்லிம் நபரை அடித்ததாகவும் அதனால் அவர் (சாவர்க்கர்) சந்தோஷமாக உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளதாக ராகுல் கூறினார். மேலும், இந்த சம்பவம் குறித்து பேசிய ராகுல் காந்தி, “இது கோழைத்தனமான செயல் இல்லையா? என்று கேட்டார். முதலில், ராகுல் காந்தி சொன்ன இந்த சம்பவம் முற்றிலும் கற்பனையானது. சாவர்க்கரின் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்ததேயில்லை. சாவர்க்கர் விஞ்ஞான குணம் கொண்டவர், ஜனநாயகத்தில் மிகவும் நம்பிக்கை கொண்டவர், அறிவியல் அணுகுமுறையை கடைப்பிடிக்க இஸ்லாமியர்களுக்கு அறிவுரை வழங்கியவர்” என்று சாத்யகி சாவர்க்கர் கூறினார்.

எனவே, சாவர்க்கரைப் பற்றி ராகுல் காந்தி கூறியது தவறானது, தீங்கிழைக்கும் மற்றும் அவமதிக்கும் நோக்கம் கொண்டது. சாவர்க்கரை இழிவுபடுத்தும் இந்த முயற்சிக்குப் பிறகு, நாங்கள் அமைதியாக இருக்க வேண்டாம் என்று முடிவு செய்து, ராகுல் மீது கிரிமினல் அவதூறு வழக்குடன் நீதிமன்றத்தை அணுகினோம். சாவர்க்கர் இதுபோன்ற விஷயங்களை எந்த புத்தகத்திலும் எழுதவில்லை, எனவே இந்த சம்பவத்தை ராகுல் காந்தி எந்த புத்தகத்தில் படித்தார்? என்பது நீதிமன்றத்தில் தெரிவிக்கட்டும். ராகுல் காந்தி பேசிய வீடியோக்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்” என்று சாத்யகி கூறினார்.