திருணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பியும், கோவாவின் முன்னாள் முதல்வருமான லூயிசின்ஹோ பலேரோ, தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். மேலும் திருணமூல் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகுவதாகவும், இப்போதைக்கு வேறு எந்த கட்சியிலும் இணையப்போவது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து, தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை சபாநாயகர் ஜகதீப் தன்கரிடம் அவர் வழங்கினார். கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கோவா பார்வேர்டு கட்சியைச் சேர்ந்த விஜய் சர்தேசாய்க்கு எதிராக போட்டியிட லூயிசின்ஹோ பலேரோ மறுப்பு தெரிவித்தார். அப்போதில் இருந்தே திருணமூல் காங்கிரஸ் கட்சி மேலிடம் அவர் மீது கடும் அதிருப்தியில் இருந்தது என்று கூறப்படுகிறது.