கடந்த வாரம் கேரளாவின் கோழிக்கோட்டில் ஓடும் ரயிலில் சக பயணிகளை தீ வைத்து கொளுத்தினான் ஷாருக் சைஃபி என்ற முஸ்லிம் பயங்கரவாதி. இதில், 3 பேர் உயிரிழந்தனர், 9 பேர் படுகாயமடைந்தனர். அவனை மகாராஷ்டிராவில் வைத்து பயங்கரவாத தடுப்புப்படை கைது செய்தது. முதலில், ‘இந்த சம்பவத்தை செய்தால் தனக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்’ என சில தெரிவித்ததாக கூறினான் ஷாருக் சைஃபி. இந்த விசாரணையை மத்திய அரசு அமைப்பான தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரப்பூர்வமாக ஏற்று நடத்தவில்லை என்றாலும், என்.ஐ.ஏ குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தனர். இந்த சம்பவத்திற்கு பயங்கரவாதத் தொடர்பு இருக்கலாம் என்று அப்போதே சந்தேகம் தெரிவித்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை மற்றும் ஐ.பி உள்ளிட்ட உளவுத்துறையினர், இந்த சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாத தொடர்பு இருப்பதை தற்போது உறுதி செய்துள்ளன. மத்திய புலனாய்வு அமைப்புகளின் கூற்றுப்படி, “டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக்கில் வசித்துவந்த ஷாருக் சைஃபி, கேரளாவுக்கு தனியாக செல்லவில்லை. மாறாக, ஒரு ரயில் பெட்டியை முழுவதுமாக எரித்து மிகப்பெரிய தாக்குதல் நடத்தும் நோக்கில் கேரளாவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளான். அவன், பயங்கரவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவன். ஒரு பெரிய பயங்கரவாதக் குழு, அவனை இந்த கொடூர குற்றத்தை நடத்த ஊக்குவித்துள்ளது. இந்த தீவைப்பு பயங்கரவாத செயலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அவன் அவர்களிடம் இருந்து பெற்றுள்ளான். இந்த தாக்குதலுக்கு இலக்காக கேரளாவையும் குறிப்பாக ஆலப்புழா கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணியில் மாபெரும் சதி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. தீவைக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தின் எண்ணெய் சேமிப்புத் தொட்டிகள் இருப்பதால், சைஃபி ஒருவேளை தனது இந்த திட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் இந்த பயங்கரவாதத் தாக்குதல் ஒரு பேரழிவாக மாறியிருக்கும்” என தெரிவித்துள்ளன. இதனால், இந்த வழக்கை என்.ஐ.ஏ விரைவில் பொறுப்பேற்கும். பயங்கரவாத செயல்கள் மற்றும் கொலைகள் காரணமாக, சைஃபி மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் குற்றம் சாட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.