மக்களால் புறக்கணிகப்பட்ட காங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “முத்ரா கடன் திட்டத்தின் கீழ், எட்டு ஆண்டுகளில் 23.2 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஈர்க்கக்கூடியது தான். ஆனல், அந்த கடன்களில் 83 சதவீதம் ரூபாய் 50,000க்கு கீழ் இருப்பதை நீங்கள் கவனிக்கும் வரை. அதாவது ரூ.19,25,600 கோடி கடன் பெற்றவர்களுக்கு ரூ. 50,000 அல்லது அதற்கும் குறைவான அளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது. ரூ.50,000 கடனில் இன்று என்ன தொழில் செய்ய முடியும் என்று என்னை யோசிக்க வைக்கிறது?” என கூறியுள்ளர். அவரது இந்த அரைகுறை புரிதல் குறித்து சந்தேகம் தெரிவித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “முதலில், முத்ரா கடனைப் பற்றிய முன்னாள் நிதியமைச்சரின் புரிதல் தவறானது மற்றும் தவறான தரவுகளால் ஆனது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்ததைப் போல, நிதியை திருப்பி அளிக்காதவர்களுடன் இதனை ஒப்பிடக் கூடாது. முத்ரா கடன்கள் கடின உழைப்பாளிகளான நடுத்தரக் குடும்பங்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதாகும். கடந்த 8 ஆண்டுகளில் (பிப்ரவரி 2023 வரை) வழங்கப்பட்ட கடன் தொகையின் அடிப்படையில் முத்ரா கடன்களின் கலவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சிசு: 41 சதவீதம் (50 ஆயிரம் வரை), கிஷோர்: 36 சதவீதம் (50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை), தருண்: 23 சதவீதம் (5 லட்சம் முதல் 10 லட்சம் வரை). வழங்கப்பட்ட மொத்த சிசு கடன் 8.89 லட்சம் கோடிகள். மேலும் முத்ரா கடன்களின் செயல்படாத சொத்துகள் (என்.பி.ஏ) மதிப்பு கடந்த 7 ஆண்டுகளில் வெறும் 3.3 சதவீதம் மட்டுமே. முன்னாள் நிதியமைச்ச ஒருவர் எப்படி இப்படிப்பட்ட பிழைகளைச் செய்தார்? அல்லது தவறான தகவல்களைப் பரப்பும் ஒரு வேண்டுமென்றே முயற்சியா என்று இது யோசிக்க வைக்கிறது” என தெரிவித்துள்ளார்.