இந்து முன்ன்ணி அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் நடந்த ஒரு பொதுகூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நரிக்குரவ சமுதாய மக்கள் தன்னை பார்த்தபோது நாங்களும் மாயாண்டி குடும்பத்தார் தான் என்று கூறியதாகவும், அதனை தனது மனைவி கேவலமாகப் பார்த்ததாகவும் நக்கலடித்தபடி பேசியுள்ளார். ஏற்கனவே ஈரோட்டில் அருந்ததியர் சமுதாயத்தை இழிவுபடுத்தியது போல, தற்போது நரிக்குறவர் சமுதாய மக்களையும் இழிவுபடுத்தி பேசியுள்ளார். இன்றளவும் பல இடையூறுகளுக்கு இடையில் தங்களது பாரம்பரியத்தை மறக்காமல் தொடர்ந்து ஹிந்து மதத்திலேயே வாழ்ந்து வருபவர்கள் நரிக்குறவ சமுதாயத்தினர். இவர்களைப் போன்றவர்கள் இங்கேயே பல நூறாண்டுகளாக வாழ்கிறவர்கள். சீமான், தான் மட்டும்தான் தமிழர்களின் ஒட்டுமொத்த காவலர் என்ற போர்வையில் தமிழகத்தில் ஜாதி ரீதியிலான பிரச்சனைகளை உருவாக்கி கலவரத்தை தூண்ட நினைக்கிறார். ஹிந்து மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க திட்டமிட்டு பேசிவருகிறார். இது தமிழகத்தின் பொதுஅமைதியை கெடுக்கும் செயல். இதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கினைப்பாளர் சீமானை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டுமென இந்துமுன்னணி வலியுறுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.