ஸ்ரீராமநவமி கொண்டாட்டங்களின்போது, அடிப்படைவாத முஸ்லிம்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஹிந்துக்கள் மீதும் அவர்கள் நடத்திய ராம நவமி ஊர்வலங்கள் மீதும் கொலைவெறி தாக்குதல்களை திட்டமிட்ட ரீதியில் நடத்தினர். இதில் சிலர் கொல்லப்பட்டனர். காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் படுகாயமடைந்தனர். பல வாகனங்கள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. அவ்வகையில், பீகாரிலும் ஸ்ரீராம நவமி ஊர்வலம், சிலை கரைப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது, நாலந்தா மற்றும் சசராம் ஆகிய மாவட்டங்களில் ஹிந்துக்கள் மீது மர்ம நபர்கள் வன்முறை தாக்குதல் நடத்தினர். இது இரு தரப்பினர் இடையே மோதலாக மாறியது. இதில், 8 பேர் காயமடைந்தனர். 3 பேருக்கு துப்பாக்கி குண்டு காயங்கள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து நாலந்தா மாவட்டத்தின் பீஹார்ஷெரீப் மற்றும் ரோத்தாஸ் மாவட்டத்தின் சசராம் பகுதியில் பலப்படுத்தப்பட்டது. 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நாலந்தாவில் 27 பேரும், ரோத்தாசில் 18 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் தப்பியோடிய பலர் தேடப்பட்டு வருகின்றனர். பிரச்சனையை தூண்டிவிடக்கூடிய அல்லது பொய்யான செய்திகள் பரவாமல் தடுக்கும் வகையில் சமூக ஊடகங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் சட்டம் மற்றும் ஒழுங்கை பேண ஒத்துழைக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், பீகாரில் மர்ம நபர்களால் மீண்டும் வன்முறை நிகழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். அவரது உடலை காவலர்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வன்முறையை தொடர்ந்து காவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில் 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் கூடுதல் படைகள் குவிக்கப்பட உள்ளன. பீகாரில் நிகழ்த்தப்பட்ட இந்த திட்டமிட்ட வன்முறை சம்பவங்கள் பற்றியும், தற்போதுள்ள நிலைமை பற்றியும் அம்மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கரிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வழியே விவ்வரங்களை கேட்டறிந்தார். மேலும், தேவைபட்டால், வன்முறை பரவிய இடங்களுக்கு மத்திய ஆயுத போலீஸ் படைகளை அனுப்பவும் உறுதியளித்துள்ளார்.