தன்னார்வ வரி இணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் வெளிப்படையான மற்றும் ஊடுருவாத வரி நிர்வாகத்தை எளிதாக்குவதற்கும் வருமான வரித்துறை பல முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அத்தகைய முக்கிய முயற்சிகளில் ஒன்று மின்- சரிபார்ப்பு திட்டம் 2021 திட்டம். இது டிசம்பர் 13, 2021 அன்று அறிவிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பத்தை திறம்படப் பயன்படுத்தி, வரி செலுத்துவோர் தாக்கல் செய்யும் வருமான வரிக் கணக்கில் காண்பிக்கப்படாத, தெரிவிக்கப்படாத அல்லது குறைத்துக் காண்பிக்கப்பட்டதாகத் தோன்றும் நிதிப் பரிவர்த்தனை பற்றிய தகவலை வரி செலுத்துவோருடன் பகிர்ந்துகொள்வதையும் சரிபார்ப்பதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பல்வேறு துறைகளின் ஆதாரங்களில் இருந்து நிதி பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களை வருமான வரித்துறை சேகரித்து வருகிறது. முன்னதாக, ’26 ஏ.எஸ்’ அறிக்கையில் அதன் ஒரு பகுதி, வரி செலுத்துவோருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இருப்பினும், பல்வேறு ஆதாரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை திறம்பட பயன்படுத்தும் நோக்கில், முழுத் தகவல்களும் இப்போது வருடாந்திர தகவல் அறிக்கை (AIS) மூலம் வரி செலுத்துவோருக்கு அளிக்கப்பட்டுள்ளது. வருவாயின் ஆதாரங்களில் ஏதேனும் தவறான தகவல்கள் இருக்குமாயின், அதனை ஆட்சேபிக்கும், மறுக்கும் வசதியை வருடாந்திர தகவல் அறிக்கையானது வரி செலுத்துவோருக்குக் கொடுத்திருக்கிறது. வருமான வரித்துறை, பெறப்பட்ட தகவலின் உண்மை தன்மையினை அதை அளித்தவர்களுடன் உறுதிப்படுத்துகிறது மற்றும் ஆதாரம் பிழை இல்லை என்று அறிந்தால், அந்தத் தகவல் மின் சரிபார்ப்புக்கான இடர் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படும்.
மின் சரிபார்ப்பின் முழு செயல்முறையும் டிஜிட்டல் முறையிலானது. மின்னணு முறையில் அறிவிப்புகள் மற்றும் வரி செலுத்துவோரின் பதில்கள் மின்னணு முறையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. விசாரணை முடிந்ததும், வரி செலுத்துபவர் நேரில் வரத் தேவையில்லை. மின்னணு முறையில் சரிபார்ப்பு அறிக்கை தயாரிக்கப்படுகிறது. செலுத்துபவருடன் எந்தவித வரி செலுத்துவோருக்கு, நிதி பரிவர்த்தனையை ஆதாரத்துடன் விளக்க இத்திட்டம் உதவுவதால் வரி செலுத்துவோருக்கு மிகவும் பயனுள்ளதாக அமைத்துள்ளது. இத்திட்டம் தகவல்களைத் திருத்தம் செய்வதற்கும் உதவுகிறது மற்றும் அதன் மூலம் தவறாகப் புகாரளிக்கப்பட்ட தகவலின் மீதான நடவடிக்கைகளைத் தொடங்குவதைத் தடுக்கிறது. மேலும், நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்கள் வரி செலுத்துவோருடன் பகிர்ந்து கொள்ளப்படுவதால், வரி செலுத்துவோர் தாக்கல் செய்த வருமான வரிப்படிவத்தில் சரியான முறையில் தெரிவிக்கப்படாத வருமானத்தை சரி செய்ய, புதுப்பிக்க இது ஒரு வாய்ப்பாக வழங்கப்படுகிறது. இத்திட்டம் வரி செலுத்துவோரை தன்னார்வ இணக்கத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது.
இந்தத் திட்டம், வரி செலுத்துவோர் அசல் வருமான வரிப்படிவத்தில் காண்பிக்கப்படாத தகவல்களை மீண்டும் சரி பார்த்து வரிப்படிவத்தை திருத்தும் செய்து சமர்ப்பிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளதால், பல வரி செலுத்துவோர் புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப்படிவங்களைத் தாக்கல் செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இத்திட்டம் மற்றும் அதில் உள்ள பல்வேறு செயல்முறைகள் பற்றிய சிறந்த புரிதலை எளிதாக்க, www.incometax.gov.in என்ற இணையதளத்தில் மின் சரிபார்ப்புத் திட்டம், 2021 பற்றிய அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) பகுதியை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.