கல்வியை மறுசீரமைத்தல்

அடுத்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும் புதுப்பிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், அனைத்து நிலைகளுக்கும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை (NCF) கல்வி அமைச்சகம் வரும் மாதங்களில் வெளியிட உள்ளது. தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு, பாடத்திட்ட வழிகாட்டுதல்களின் தொகுப்பு, புதிய தேசிய கல்விக் கொள்கையின் (NEP) முக்கிய அங்கமாகும். தற்போது, அமைச்சகம் அடித்தள நிலைக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை வெளியிட்டுள்ளது, இது முன்பள்ளி முதல் வகுப்பு 2 வரை உள்ளடக்கியது. விரைவில் மற்ற நிலைகளுக்கு தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு வெளியிட திட்டமிட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட இந்த பாடப்புத்தகங்கள் ஹிந்தி, ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் அச்சிடப்படும். அடுத்த கல்வியாண்டிற்கான அடிப்படை நிலைக்கான புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள், ஏற்கனவே சி.பி.எஸ்.இ’யால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் 1 மற்றும் 2ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் மாத இறுதியில் வெளியிடப்படும்.

புதிய தேசிய கல்விக் கொள்கை 2020’ஐ வடிவமைக்க உதவிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) முன்னாள் தலைவரான கே. கஸ்தூரிரங்கன் தலைமையிலான நிபுணர் குழுதான் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின் வளர்ச்சியை வழிநடத்துகிறது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT), 25 தேசிய கவனக் குழுக்களின் செயல்முறை உள்ளீடுகளுடன் அதனை மேற்பார்வையிடுகிறது. புதிய பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டதும், அரசாங்கம் பாடத்திட்டத்தை அதன் புதிய மதிப்பீட்டு தளமான PARAKH (செயல்திறன் மதிப்பீடு, முழுமையான வளர்ச்சிக்கான அறிவின் ஆய்வு மற்றும் பகுப்பாய்வு) உடன் சீரமைக்க திட்டமிட்டுள்ளது.