உத்தரப் பிரதேச மாநிலம் கவுசம்பியில் மருத்துவ ஊர்திகளைப் பயன்படுத்தி பொது சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளாக 25,000க்கும் மேற்பட்ட மக்கள் பதிவு செய்துள்ள மருத்துவ ஊர்தியின் உதவியுடன் 2,47,500 மக்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது பற்றிய உத்தரப் பிரதேச மாநிலம் கவுசம்பி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோத் சோன்கரின் டுவிட்டர் பதிவைப் பகிர்ந்துகொண்ட பிரதமர், “அற்புதமான முயற்சி! இது போன்ற பொது சேவை முன்முயற்சிகள், வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கவிருக்கின்றன” என கூறியுள்ளார்.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் குருங் குமே மாவட்டத்தில் உள்ள தொலைதூர பகுதிகளில் ஒன்றான ஹுரி வரை செல்லும் 278 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஹப்போலி-சார்லி ஹுரி சாலையை சுதந்திரத்திற்கு பிறகு முதன்முறையாக தார்ச்சாலை அமைத்து சாதனை புரிந்த எல்லை சாலைகள் அமைப்பிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து எல்லை சாலைகள் அமைப்பின் தொடர் டுவிட்டர் பதிவுகளைப் பகிர்ந்துகொண்ட பிரதமர், “பாராட்டத்தக்க சாதனை!” என தெரிவித்துள்ளார்.