வெளியாகும் பாதிரியின் செயல்பாடுகள்

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்தவ பாதிரி பெனடிக்ட் ஆண்ட்ரோ. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த பாதிரி, இளம்பெண்களுடன் நெருக்கம், வீடியோ காலில் நிர்வாணமாக பேசுதல், ஆபாசமாக சேட்டிங் என செய்த லீலைகள் சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி கொடுத்த புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ் பாதிரி பெனடிக்ட் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த பாதிரி தலைமறைவானார். பின்னர் கடந்த 20ம் தேதி நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் பதுங்கியிருந்த அவரை காவல்ரர்கள் கைது செய்தனர். பாதிரியின் அலைபேசி, லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. ஆபாச வீடியோக்கள் குறித்து பாதிரி பெனடிக்ட் ஆண்ட்ரோவிடம் கேள்விகளை கேட்டு அவருடைய வாக்குமூலத்தை பெற்ற காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாதிரி மீது மேலும் 4 பெண்கள் புகார் அளித்தனர். இதனிடையே ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள், மருமகள் என 3 பேரிடம் இந்த கிறிஸ்தவ பாதிரி ஆபாச சேட்டிங்கில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இந்த வழக்கு தொடர்பாக அவர் கூறிய தகவல்கள் மற்றும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் பாலியல் துஷ்பிரயோகத்தின் வேர்களை ஆய்வு செய்வதில் தனது வாழ்நாளை செலவிட்ட ஒரு ஆராய்ச்சியாளர், உளவியலாளர் மற்றும் முன்னாள் பாதிரியான ஏ.டபிள்யூ. ரிச்சர்ட் சைப், அனைத்து பாதிரிகளில் 6 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்கள். 50 சதவீதத்திற்கும் குறைவான பாதிரிகள் மட்டுமே பிரம்மச்சாரிகளாக இருந்தனர். வயதுவந்த பெரியவர்களுக்கு இடையேயும் இது நடக்கிறது. அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள கிறிஸ்தவ மதகுருமார்களுக்கு இடையே பாலியல் செயல்பாடு மற்றும் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்தல் ஆகியவற்றுக்கு இடையே ஒரு முறையான தொடர்பு உள்ளது என்பது விரைவில் அல்லது பின்னர் தெளிவாகத் தெரியவரும். அதிகாரத்தில் உள்ள ஆண்கள், கார்டினல்கள், பிஷப்புகள், ரெக்டர்கள், பாதிரிகள் போன்றோர், பிரம்மச்சரியம் என்ற போர்வையில் அங்கீகரிக்கப்படாத ரகசிய பாலியல் வாழ்க்கையைக் கொண்டிருக்கும் சூழலில், இந்த அமைப்பில் வேறுவழியின்றி இத்தகைய நடத்தைகளை சகித்துக்கொள்ளும் சூழல் செயல்படும்” என கூறியிருந்தார் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.