தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே நாகுரி பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் காயமடைந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதி ஷாரிக், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். தற்போது ஷாரிக் பூரண குணமடைந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள், அவனை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், துங்கா ஆற்றங் கரையோரத்தில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து குண்டுவெடிப்பு ஒத்திகை நடத்திய வழக்குத் தொடர்பாக, என்.ஐ.ஏ அதிகாரிகள் அந்த பயங்கரவாதயை சிவமொக்கா, துங்கா ஆற்றங்கரையோரம் மற்றும் அரசு பஸ் நிலையம் அருகே அவர் தங்கி இருந்த விடுதிஅழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் குண்டுவெடிப்பு சோதனை நடத்திய துங்கா ஆற்றங்கரை, அரசு பேருந்து நிலையம் அருகே அவர் தங்கி இருந்த விடுதி போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பெங்களூருவுக்கு அழைத்து சென்றனர்.