உளவாளிகளுக்கு உதவியவர்கள் கைது

அசாம் மாநிலத்தில் சில இடங்களில் வன்முறை நிகழ்ந்தது. இதனை தொடர்ந்து திங் மற்றும் பததிராவா பகுதிகளில் நகாவன் நகர காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அளித்த தகவலின் பேரில், சந்தேகத்திற்குரிய ஷிகுல் இஸ்லாம், போடோர் உடின், மிசானூர் ரஹ்மான், வஹிதுஸ் ஜமான் உள்ளிட்ட 10 பயங்கரவாத ஆதரவாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. அவர்கள், பாகிஸ்தான் உளவாளிகளுக்கு சிம் கார்டுகளை வினியோகித்துள்ளதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இவர்களில் பலர், மத்திய விசாரணை அமைப்புகளிடம் இருந்து தப்பிக்க, தங்களது வாட்ஸ்அப் எண்களுக்கு வரும் ஓ.டி.பி. எண்களை பாகிஸ்தானிய உளவாளிகளுக்கு அனுப்பி, அங்கிருந்து அதனை இயக்க முயன்றுள்ளனர். வெளிநாட்டுத் தூதரகத்துடன் பாதுகாப்புத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்  என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்தும், தலைமறைவான மற்ற ஐந்து பேரின் வீடுகளிலிருந்தும் மீட்கப்பட்ட பொருட்களில் 18 அலைபேசிகள், மோசடி நோக்கங்களுக்காக வாங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 136 சிம் கார்டுகள், ஒரு கைரேகை ஸ்கேனர், ஒரு உயர் தொழில்நுட்ப சிபியு மற்றும் பிறப்புச் சான்றிதழ்கள், பாஸ்புக் மற்றும் புகைப்படங்கள் போன்ற சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவர்களிடம் காவல்துறையைத்தவிர, ஐ.பி உள்ளிட்ட விசாரனை அமைப்புகளும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.