உத்தரப் பிரதேசம் அலிகரில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தின் (ஜே.எம்.ஐ.யு) சில முஸ்லீம் மாணவர்கள், பல்கலைக்கழக வளாகத்தில் ஹிந்து பண்டிகையான ஹோலியைக் கொண்டாடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக புகார் எழுந்துள்ளது. மார்ச் 1, 2023 அன்று, பல்கலைக் கழகத்தின் யுவா பிரிவு, வளாகத்தில் வரவிருக்கும் ஹிந்து பண்டிகையைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்திருந்த ‘ரங்கோத்சவ்’ என்ற நிகழ்வின் போது இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் 8ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
டுவிட்டர் பயனர் ஜதின் ஜெயின், மார்ச் 3, வியாழன் அன்று, பல்கலைக்கழக வளாகத்தில் நடந்ததை பகிர்ந்துள்ளார். அங்கு முஸ்லிம் மாணவர்கள் குழு, வளாகத்தில் திருவிழாவைக் கொண்டாடுவதற்கு எதிராக தங்கள் சகாக்களை அச்சுறுத்துவதையும் மிரட்டுவதையும் காண முடிந்தது. மற்றொரு வீடியோவில், பல்கலைக்கழக வளாகத்தில் ஹோலி கொண்டாடுவதை எதிர்த்து முஸ்லிம் மாணவர்கள் “நாரா இ தக்பீர், அல்லா ஹு அக்பர்” கோஷங்களை எழுப்புவதையும் காணமுடிந்தது. இதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது அவர்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். ஜே.எம்.ஐ.யுவின் முஸ்லீம் மாணவர் ஒருவர், ஹிந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களைத் தூண்டிவிட்டு, ஹிந்து பண்டிகைகளில் பங்கேற்பதைத் தடுத்தது வெளியிட்ட ‘dayar.e.shauq’ என்ற இன்ஸ்டாகிராம் பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை மற்றொரு பயனர் பகிர்ந்துள்ளார். அதேசமயம், மற்ற முஸ்லிம் மாணவர்கள், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த மற்ற மாணவர்களை ஹிந்து பண்டிகையில் பங்கேற்பதை ஊக்கப்படுத்திய செய்திகளையும் சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
ஹிந்து பண்டிகைகளை கொண்டாடுவது இஸ்லாத்தில் ‘ஹராம்’ என்று கருதப்படுகிறது. முஸ்லிம்கள் சமீப காலமாக ஒவ்வொரு ஹிந்து பண்டிகையின் போதும் தேசமெங்கும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றனர். ஹனுமன் ஜெயந்தி, ஸ்ரீராம நவமி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, கன்வர் யாத்திரை, துர்கா பூஜை, விநாயகர் சதுர்த்தி போன்ற ஹிந்து மத பண்டிகைகள், ஊர்வலங்களுக்கு இடையூறுகளை உருவாக்குகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஹிந்து மத விழாக்களின் போது, கல் எறிதல், தீ வைப்பு, துப்பாக்கி, கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்துதல், பெட்ரோல் வெடிகுண்ட வீசுதல், வெறுப்புணர்வை பரப்புதல் உள்ளிட்ட பல காழ்ப்புணர்ச்சி சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஹிந்துக்கள் மீதான இந்த கொடூரமான தாக்குதல்கள், அதன் எண்ணிக்கையிலும் தீவிரத்திலும் அதிகரித்து வருகின்றன என்பது ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. நாடு முழுவதும், 2019 முதல் 2022 வரை சுமார் 35க்கும் மேற்பட்ட தாக்குதல்கள், ஹிந்து பண்டிகை மற்றும் ஊர்வலங்களுக்கு எதிராக முஸ்லிம்களால் நடத்தப்பட்டுள்ளதாக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. வழக்குகள் பதியப்படாத இதுபோன்ற சம்பவங்கள் இதைவிட அதிகமாக இருக்கும் வாய்ப்பையும் மறுப்பதற்கில்லை.