பணிந்தது தி.மு.க அரசு

தமிழகத்தின் கனிமவளங்கள் கொளையடிக்கப்பட்டு கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆளும் கட்சிக்கும் தொடர்புள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுகிறது. தனியார் நிறுவனம் வாயிலாக, யூனிட்டுக்கு, 400 ரூபாய் வசூலித்து, பாஸ் வழங்கி, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், கடந்த 26ம் தேதி கிணத்துக்கடவில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில்‌, பேசிய அண்ணாமலை, “கனிமவள கடத்தலை தடுக்க, 20 நாட்களுக்குள்‌ நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. இல்லையெனில்‌, 21வது நாள்‌, சோதனைச்சாவடியில்‌ தொண்டர்களோடு தொண்டனாக நானும் களமிறங்கி போராட்டம் நடத்துவேன், கனிமவள கடத்தலை தடுப்பேன்” என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்‌. அந்த பணம் கோபாலபுரத்துக்கு செல்வதையும் அம்பலப்படுத்தினார். இந்நிலையில்‌, தற்போது மாவட்ட நிர்வாகம்‌ அறிவுறுத்தலின்படி பொள்ளாச்சி கோட்டத்தில்‌ உள்ள சோதனைச்சாவடிகளில்‌, கிராம நிர்வாக அலுவலர்களை கண்காணிப்பு பணியில்‌ ஈடுபடுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வட்ட நிர்வாகம்‌, புவியியல்‌ மற்றும்‌ சுரங்கத்துறை உதவி இயக்குனர்‌ மற்றும்‌ துணை ஆட்சியர்கள் அறிவறுத்தலின்படி. கிராம நிர்வாக அலுவலர்களை கொண்ட கூழு அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநில எல்லையில்‌ அமைந்துள்ள சோதனைச்சாவடிகளில்‌, அனுமதியின்றி சாதாரண கற்கள்‌, கிராவல்‌ மண்‌ ஆகியவற்றை கடத்துவதை தடுப்பதற்காக வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிப்ரவரி 28 முதல் இதற்காக, கிராம நிர்வாக அலுவலர்கள்‌ பணி அமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணியில்‌ ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆனைமலை தாலுகாக்கள்,, மீனாட்சிபுரம்‌, செமணாம்பதி சோதனைஸ் சாவடிகளில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் வருவாய்‌ துறை அதிகாரிகள்‌ தெரிவித்துள்ளனர்.