தமிழக பா.ஜ.கவை சேர்ந்த பெண் ஒருவர், மத்திய அரசின் நல திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கி அவர்களிடம் இருந்து பயனாளர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வந்தார். இதனை திமுக.,வினர் சிலர் தடுத்ததுடன் அவர் வைத்திருந்த விண்ணப்பங்களை பறித்து அராஜகம் செய்தனர். அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை எதிர்த்து அந்த பா.ஜ.க பெண் நிர்வாகியும் துணிச்சலுடன் தனி ஆளாக நின்ற போராடினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. திமுக இளைஞர் அணியின் மாவட்ட செயலாளர் விநாயக மூர்த்தி என கூறிக்கொள்ளும் அந்த நபரையும் அவருடன் வந்த தி.மு.க குண்டர்களின் இந்த அநாகரீக செயல்பாட்டையும் பொதுமக்கள் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.