கேரளாவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய மார்தோமா சிரியன் சர்ச்சை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியான பாஸ்டர் பனவில புத்தன்வீடு சாஜி தாமஸ் என்பவரை எர்ணாகுளம் காவல்துறையினர் கைது செய்தனர். தாமஸ் சாதாரண பெண்களை மிரட்டி கற்பழிப்பதில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. கணவரிடமிருந்து பிரிந்து இருந்த கொச்சியை சேர்ந்த அந்த பாதிக்கப்பட்ட பெண்ணை தாமஸ் சந்தித்து நட்பை வளர்த்தார். தன்னால் குடும்பப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று அவரை நம்பவைத்ததுடன் அவரை ‘ஆன்மீக முன்னேற்றத்திற்கு’ அழைத்துச் செல்வதாக உறுதியளித்தார். அவர்கள் இரவில் வாட்ஸ்அப் மூலம் இதைப்பற்றி அரட்டை அடிக்கத் தொடங்கினர், இறுதியில் அது பாலியல் சுரண்டலுக்கு வழிவகுத்தது. நெருக்கம் அதிகரித்ததால், குற்றம் சாட்டப்பட்டவரின் வீடு உட்பட பல இடங்களில் தாமஸ் அந்த பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டார். தாமஸ் அவரிடம் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதோடு அந்த செயல்களை அவருக்குத் தெரியாமல் தனது கைப்பேசியில் ரகசியமாக படம் பிடித்தார். பின்னர், அதனை காட்டி மிரட்டி சித்திரவதையைத் தொடர்ந்தார். அந்த பெண் தகாத உறவுகளில் ஈடுபட மறுத்ததால், தாமஸ் அவரது அந்தரங்கப் படங்களை வெளியிடுவதாக மிரட்டினார். வேரு வழியின்றி அவருக்கு ஒத்துழைத்த அந்த பெண், ஒருகட்டத்தில் தன்னால் தாங்க முடியாத சூழலில், காவல்துறையில் புகார் அளித்தார். அவர் புகார் கூறியதை அறிந்த தாமஸ் தப்பியோட முயன்றபோது ரயில் நிலைய வளாகத்தில் வைத்து காவலர்கள் அவரை பிடித்து கைது செய்தனர். அவரது ஒழுக்கக்கேடான குணத்தின் காரணமாக, 2021ம் ஆண்டில், கிறிஸ்தவ திருச்சபை அவரை தடை செய்வதாக அறிவித்தது. எனினும், பல கிறிஸ்தவ சர்ச்சுகள் அத்தகைய கற்பழிப்பு பாதிரியார்களைப் பாதுகாக்கும் ஒரு வித்தியாசமான பழக்கத்தைக் கொண்டுள்ளன. அவர்கள் தேவாலய செமினரிகளில் தொடர்ந்து வாழ்கின்றனர். அவரது தடை காலத்திலும் தாமஸ் மார்த்தோமா சர்ச் உறுப்பினர் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். எனினும், மர்மமான முறையில், அவர் சமீபத்தில் மீண்டும் பணியமர்த்தப்பட்டார். இந்தச் சம்பவம் மற்றும் அவர் கைது செய்யப்பட்டபோது, சர்ச் குற்றம் சாட்டப்பட்ட சாஜி தாமஸை எங்கோ ஒரு தேவாலயத்தின் பொறுப்பில் வைக்க முனைந்திருந்தது. மேலும், முந்தைய புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது அநாமதேயமாக உள்ளது. (செய்தி ஆதாரம்: https://hindupost.in/featured/marthoma-christian-priest-thomas-arrested-for-sexual-abuse-in-kerala/)