உத்தரபிரதேச மாநிலம் மஹோபாவில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், ஆயுதம் ஏந்திய ஒரு முஸ்லிம் வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள், அங்கு நடைபெற்ற ஹிந்துக்களின் திருமண நிகழ்ச்சியை சீர்குலைத்து, அங்க்கிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலரை உடல்ரீதியாக தாக்கி துன்புறுத்தினர். பிப்ரவரி 12ம் தேதி இரவு, கிருஷ்ணா திருமண மண்டபத்தில் தனது மகள் அஷ்வினியின் திருமணத்தை விஜய் குமார் என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். திருமண விழா முடிந்து அவர்கள் தங்கள் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். பிப்ரவரி 13 அதிகாலை. ஆனால் மணமகளின் கார் வீட்டை அடைந்து அவர்கள் இறங்கும் போது, முபாரக் கான் என்ற முஸ்லீம் நபர் தனது காரை திருமண வீட்டார் வாகனத்தின் மீது மோதினார். குடும்பத்தினர் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது அவர்களை இழிவாக பேசி துஷ்பிரயோகம் செய்தார் முபாரக் கான். மேலும், அருகில் உள்ள முஸ்லீம் ஆண்களை கூடுமாறு கூச்சலிட்டார். உடனடியாக அங்கு சுமார் 40 நபர்கள் அடங்கிய முஸ்லிம் கும்பல் அப்பகுதியை சேர்ந்த முகமது சபியா ரௌடியின் தலைமையில் வாள்கள், கம்புகள், தடிகள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களுடன் திரண்டனர். திருமண வீட்டாரை கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். திருமண நிகழ்ச்சியை நிம்மதியாக முடிக்க விடுமாறு அந்த குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தும் பலனில்லை. அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். காவலர்கள் அங்கு வருவதைக் கண்டவுடன் அந்த வன்முறை கும்பல், திருமண வீட்டாரின் நகை, பணம் உள்ளிட்டவற்றை பிடுங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் அப்பகுதியில் உள்ள இந்த ஹிந்து குடும்பத்தை அவர்கள் அச்சுறுத்துவது இது முதல்முறையல்ல என கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.