உண்மையை திரித்த அதிகாரிகள்

மறைந்த தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு, மெரினா கடலில், பொதுமக்களின் வரிப்பணம் ரூ. 81 கோடியில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடந்த கருத்துக்கேட்புக் கூட்டத்தில், பொதுமக்கள் தெரிவித்த எதிர்ப்பு கருத்துகளை திரித்து, அதிகாரிகள் குளறுபடி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிக்கை, பொதுப்பணித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கூட்டத்தில், 34 பேர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ததகவும் அதில் 22 பேர் பேனா நினைவுச் சின்னத்துக்கு ஆதரவு தெரிவித்ததாகவும், 12 பேர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கை, பொதுப்பணித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கூட்டத்தில், 34 பேர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ததகவும் அதில் 22 பேர் பேனா நினைவுச் சின்னத்துக்கு ஆதரவு தெரிவித்ததாகவும், 12 பேர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, கூட்டத்தில் பங்கேற்ற தன்னார்வ அமைப்பினர் கூறுகையில், இக்கூட்டத்தில் மொத்தம், 1,200 பேர் பங்கேற்றனர். அதில், மேடையேறி தங்கள் கருத்தை பதிவு செய்ய வெறும் 34 பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டது. மொத்தமுள்ள 1,200 பேரில், 34 பேரின் கருத்து என்பது வெறும் 2.83 சதவீதம் தான். அதில் 22 பேர் ஆதரவு என்பது 1.83 சதவீதம்தான். இதை வைத்துக்கொண்டு பேனா நினைவுச்சின்னம் அமைக்க மக்கள் ஆதரவு அளித்ததாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, அரசுக்கு சாதகமாக அறிக்கை அளிக்கும் நோக்கில் அரசு அதிகாரிகள் செயல்படுகின்றனர். அதிகமான மக்கள் மேடையில் பேச முடியாது என்பதால், எழுத்துப்பூர்வமாக தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால், அறிக்கையில், எழுத்துப்பூர்வமாக எவ்வளவு பேர் ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்யப்பட்ட கருத்துகளை, ஆதரவு கருத்துகளாக திரித்து, இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. பேசியவர்களின் வரிசைகள் மாற்றப்பட்டு, சிலரது பெயர்கள் வேண்டுமென்றே வேறு இடத்தில் பதியப்பட்டு ஆதரவு கருத்து தெரிவித்ததாக பதிவிடப்பட்டுள்ளது என அதில் பங்கேற்ற சில சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.