வெளிப்படும் சர்வதேச சதித்திட்டங்கள்

ஹங்கேரிய அமெரிக்க தொழிலதிபரும் சர்ச்சைக்குரிய கோடீஸ்வர முதலீட்டாளருமான ஜார்ஜ் சொரோஸ், சமீபத்திய அதானி பங்குச் சந்தை நெருக்கடி குறித்து பேசினார். மியூனிச் பாதுகாப்பு மாநாட்டிற்கு முன்னதாக ஒரு உரையில், “அதானி நெருக்கடி குறித்து பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார். ஏனெனில் அவர் இந்திய தொழிலதிபர் கௌதம் அதானியுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளார். அவர்களின் தலைவிதி பின்னிப் பிணைந்துள்ளது. மோடி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் நாடளுமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இந்த விவகாரம் பாரதத்தின் கூட்டாட்சி அரசின் மீதான மோடியின் பிடியை கணிசமாக பலவீனப்படுத்தும். மிகவும் தேவையானசீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான கதவைத் திறக்கும். பாரதத்தில் ஜனநாயக மறுமலர்ச்சியை எதிர்பார்க்கிறேன். மோடி ஜனநாயகவாதியல்ல. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டுவது தான் அவரது எழுச்சிக்கு ஒரு முக்கிய காரணி” என தெரிவித்துள்ளார். மேலும், பாரதம் தள்ளுபடி விலையில் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதற்கு எதிராகவும் புலம்பினார்.

ஜனவரி 2020ல், இதே ஜார்ஜ் சோரஸ் தான் தேசியவாதிகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்து ஒரு உலகளாவிய ஒரு பல்கலைக் கழகத்தைத் தொடங்க ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவியை அறிவித்தார். அவற்றை நமது நாகரிகத்தின் உயிர்வாழ்வை அச்சுறுத்தும் இரட்டை சவால்கள் என்று அழைத்தார். எனவே, அவரது தற்போதைய கருத்து, பாரதத்தில் ஆட்சியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசை சிதைக்கும் பெரிய அலவிலான சர்வதேச சதி இருப்பதை பெரும்பாலும் உறுதிப்படுத்துகிறது.

ஜார்ஜ் சோரஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரெக்சிட் மீது முன்னரும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதற்காக ஏராளமாக நிதியுதவி செய்தார். இத்தகைய நிதியுதவிகள் மூலம் அந்த நாடுகளின் நலன்களுக்கு எதிராக பல பிரச்சனைகளை மறைமுகமாக தூண்டிவிட்டார் என்ர குற்றச்சாட்டு உள்ளது. மேலும், ‘இந்த நிதியுதவிகள், அவர் நிறுவிய சர்ச்சைக்குரிய அமைப்பான ஓபன் சொசைட்டி ஃபவுண்டேஷன்ஸ் மூலம் இயக்கப்படுகிறது. இந்த அமைப்பு உலகெங்கிலும் உள்ள முன்னணி பல்கலைக் கழகங்கள், சிந்தனைக் குழுக்கள் மற்றும் கலாச்சார நிறுவனங்களுக்கு இடையே கூட்டாண்மைகளை வளர்ப்பதாக கூறிக்கொண்டு இவற்றை செய்து வருகிறது, பாரதத்தில் நடைபெற்ற விவசாய போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களுக்கும் மறைமுக நிதியுதவி செய்துள்ளார்.

ஜார்ஜ் சோரஸ், தனது ஓபன் சொசைட்டி அறக்கட்டளையின் மூலம், 1999ல் முதன்முதலில் பாரதத்தில் தனது செயல்பாடுகளைத் தொடங்கினார். பாரத கல்வி நிறுவனங்களில் படிப்பு மற்றும் ஆராய்ச்சியைத் தொடர உதவித்தொகை மற்றும் பெல்லோஷிப்களை வழங்குவதன் மூலம், பாரதத்துக்குள் சீர்குலைவை உருவாக்குவதில் பெரும் முன்னேற்றம் கண்டார். நிதியுதவி நடவடிக்கைகள் என்ற பெயரில், சோரஸ் தலைமையிலான இடதுசாரி சர்வதேச அமைப்பு, பாரதத்துக்குள் செயல்படும் தேசவிரோத சக்திகளுக்கு தீவிர ஆதரவு அளித்தது. மெள்ள நாடு முழுவதும் அதன் கூடாரங்களை பரப்பத் தொடங்கியது.

கடந்த சில தசாப்தங்களில், ஜார்ஜ் சோரசின் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள், அறிவுஜீவிகள் போன்ற பலவற்றை உள்ளடக்கிய பல்முனை நெட்வொர்க்குகள் மூலம் பாரதத்தில் செயல்படும் தேசியவாத அரசுக்கு எதிரான போரை நடத்துகிறது. அவரது நிதியுதவிப் பணிகளைப் பொறுத்தவரை, ஒபாமா ஆட்சியின் போது சோரசின் அறக்கட்டளை, பாரதத்தில் ஒரு கோட்டையாக இருந்தது. நிதியளிக்கும் செயல்பாடு மூலம் பரந்த மற்றும் இணைக்கப்பட்ட அமைப்புகளின் மூலம் நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட முயன்றது. இந்த அமைப்புகள் நாட்டின் உண்மைக் கதையை திரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன மற்றும் தேசிய நலனைத் தடுக்க நீதித்துறை மற்றும் ஊடகங்களின் உதவியைப் பெறுகின்றன’ என்ற குற்றச்சாட்டுகள் மக்களால் பரவலாக முன் வைக்கப்படுகிறது.