கொலையாளிகளை புறக்கணிக்க ஹிந்துக்கள் முடிவு

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டம், வரல் கிராமத்தில் 16 வயதான ஹிந்து மைனர் பெண்ணைக் கொன்றதற்காக ஆரிஃப், அஷ்ரஃப், அர்மான், இர்ஃபான், அமீன் மற்றும் ஆதில் ஆகிய ஆறு பேரை பாவ்நகர் காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் பிப்ரவரி 9 அன்று நடந்தது. தகவல்களின்படி, கிராமத்தின் முன்னாள் தலைவர் லஷ்கர்பாய் பரையாவுடன் அலைபேசி கோபுரம் அமைப்பது தொடர்பாக ஆரிப் அல்லாரக்கா மற்றும் அவருடன் வந்த முஸ்லிம்கள் கும்பல் ஒன்று வாய் தகராறில் ஈடுபட்டது. பின்னர் லஷ்கர்பாயை ஆரிப் கூரிய ஆயுதத்தால் தாக்கினார். லஷ்கர்பாயின் தம்பியின் மகளான ராதிகா, ஆரிப்பிடம் இருந்து லஷ்கர்பாயை காப்பாற்ற முயன்றார். ஆரிப் அந்த சிறுமியையும் ஆயுதத்தால் தாக்கியதில் சிறுமி படுகாயமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த மோதலில் மேலும் பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் குற்றவாளிகளை காவலர்கள் கைது செய்தனர். ராதிகாவின் மரணத்தையடுத்து கிராமத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், உள்ளூர் கிராம மக்கள், கொலையாளிகளை பொருளாதார ரீதியாக புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். அறிக்கைகளின்படி, 2,000க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள், இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க கூடினர். அங்கு, கொலைகாரர்களுக்கு பாடம் கற்பிக்க பொருளாதார ரீதியாக அவர்களை புறக்கணிக்க உறுதியேர்றனர். இனிமேல் ஹிந்துக் கடை உரிமையாளர்களிடம் மட்டுமே அன்றாடப் பொருட்களை வாங்குவோம் என்றும் உறுதியளித்தனர். குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.