ராமானுஜ ஜீயருக்கு பி.எப்.ஐ மிரட்டல்

தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் மேலுக்கோட்டை கர்நாடகத்தில் உள்ள பிரபலமான வைஷ்ணவ யதுகிரி மடத்தின் தலைவர் யதிராஜா ராமானுஜ ஜீயர் சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சமீபத்தில், ஜம்மு காஷ்மீரில் ராமானுஜாச்சாரியார் சிலை திறப்பு விழாவில் அவர் பங்கேற்றார். இந்த பின்னணியில் தான் இணைய வழியில் அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இணையவழியில் அவருக்கு அழைப்பு விடுத்த மர்மநபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து, சுவாமிஜிக்கு மத்திய உள்துறை அமைச்சகம், ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது. பெங்களூரில் உள்ள மல்லேஸ்வரம் கிளை மடத்தில் சுவாமிகள் தங்கியுள்ளார். சுவாமிஜியின் சீடர் ரகுநந்தன், “சுவாமிஜிக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருந்து வருகிறது. உள்துறை அமைச்சகத்திடம் நாங்கள் கடிதம் மூலம் முறையிட்டோம். இப்போது அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்புக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சுவாமிஜி அயோத்தி, ஸ்ரீநகர், தமிழகம், பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள மடங்களுக்குச் செல்கிறார். அங்கும் அவருக்கு பாதுகாப்பு தேவை” என்றார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.