அசாம் மாநிலத்தின் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள பெபேஜியா கிராமத்தில் 14 வயது சிறுமி கடந்த 3ம் தேதி காணாமல் போனார். இது குறித்து சிறுமியின் தாயார் காவல்துறையில் புகார் அளித்தார். இதுகுறித்து காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அத்தபாரி தேயிலை தோட்டத்திற்குள் அந்த சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சுய நினைவின்றி கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். சிறுமியின் தாயார், இந்த விவகாரத்தில் பைஜான் அலி என்ற முஸ்லிம் நபர் மீது சந்தேகம் தெரிவித்துள்ளதுடன் அவர் மீது கடத்தல் புகாரும் கொடுத்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் பைஜான் அலியை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், உண்மையை ஒப்புக்கொண்ட பைஜான் அலி, தனது இரண்டு கூட்டாளிகளுடன் சேர்ந்த இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக தெரவித்துள்ளார். மேலும், தனது கூட்டாளிகளுக்கு மதுபானம் வாங்கி கொடுத்து சிறுமியை கடத்தி சென்று, தேயிலை தோட்டத்தில் வைத்து, கை, கால்களை கட்டி போட்டு 2 நாட்களாக பலாத்காரத்தில் ஈடுபட்டதை தெரிவித்தார். இதையடுத்து போக்சோ சட்டத்தில் பைஜான் கைது செய்யப்பட்டதுடன், அவரது கூட்டாளிகள் 4 பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.