அமெரிக்காவில் பாரத வம்சாவளியைச் சேர்ந்த நான்கு எம்.பிக்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வகையில், ராஜா கிருஷ்ணமூர்த்தி, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் சபையின் சீனாவுக்கான ‘ரேங்கிங்’ (குடியேற்றம்) உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். சீனர்கள் குடியேற்ற, சீனாவின் நடத்தைகள், செயல்பாடுகள், அமெரிக்காவுக்கும், உலகத்துக்கும் சீனாவின் அச்சுறுத்தல்கள் குறித்த விவகாரங்களை இந்தக் குழு கவனித்து வருகிறது. பிரமிளா ஜெயபால், பிரதிநிதிகள் சபையின் நீதித்துறை குழுவின் ‘ரேங்கிங்’ (குடியேற்றம்) உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். குடியேற்ற துணைக்குழுவுக்கு இவர் தலைமை தாங்குவார். அடுத்ததாக, அமி பெரா, பிரதிநிதிகள் சபையின் புலனாய்வு குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த குழு, சி.ஐ.ஏ, டி.என்.ஐ, என்.எஸ்.ஏ மற்றும் ராணுவ உளவுத்துறை உள்ளிட்ட நாட்டின் உளவுத்துறை அமைப்பின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும். ரோகன்னா, சீன கம்யூனிஸ்டு கட்சியுடனான அமெரிக்காவின் பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு போட்டி தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள புதிய குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.