பணத்தை மட்டுமே நம்பும் கட்சி தி.மு.க

வரும் பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் தி.மு.கவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து களமிறங்கியுள்ளது. இந்த தேர்தல் பணிகள் சார்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் கே.என் நேரு பேசும்போது, “அவன் எதுக்கு, அவன் தண்டம். மந்திரியெல்லாம் கூடாது. மாவட்ட நிர்வாகிகள் எல்லாரும் வந்துவிடுங்கள் என்று நான் நேற்றே சொல்லிவிட்டேன். நான் கண்டுக்கொள்ள மாட்டேன். நீங்கள் காசு பணம் எல்லாம் கொடுக்க வேண்டும் என்று எல்லா மாவட்ட தலைவர்களையும் கூப்பிட்டு சொல்லிவிட்டேன். 30, 31, 1ம் தேதிக்குள் பணம் பட்டுவாடா செய்துவிட்டு அனைத்தையும் செய்து முடிக்க வேண்டும். 31ம் தேதி எலெக்ஷன் பூத்தில் 10,000 பேர்களை தயார் செய்ய வேண்டும். நாளை தலைவர் ஸ்டாலினே அதிகாரிகளுக்கு வாட்ச், பிரியாணி தருவார். இப்போது நான் புறப்பட்டு திருச்சி போய் அங்கிருந்து சென்னை போய் அங்கே கூட்டத்தை முடித்துவிட்டு கோயம்புத்தூர் போய் 31ம் தேதி ராத்திரி இங்க வந்து விடுவேன். அனைத்தையும் முடித்துவிட்டேன். பழனி அண்ணன் வருவதையும், மகேஷ் வந்தால் பார்ப்போம். இல்லை என்றாம் நாமே செய்துவிடுவோம். நாசர் ஐந்துக்கு மேல வேண்டாம் என்கிறான். நாசர்னு போட்டா சங்கடப்பட்டு கிடக்கிறான். அங்க இருக்கும் உள்ளூர் ஆட்கள், அண்ணன்கள் என்றாலே…. விடுதலை சிறுத்தைகள்… அவர்கள் எங்கெல்லாம் கொடுக்கவில்லையோ நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் குடுத்துவிடலாம். நான் கொடுத்துவிட்டேன். செந்தில் பாலாஜியும் கொடுத்துவிட்டார்” என பேசினார். இந்த வீடியோவை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “தி.மு.க என்பது பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி. பணத்தை வைத்து எதையும் வாங்கி விடலாம் என்று நம்பும் ஒரு கட்சி. சந்தேகம் இருப்பின், இந்த காணொளியை பார்க்கவும்” என்று குறிப்பிட்டு @TNelectionsCEO @ECISVEEP pic.twitter.com/wU3HNIIHZW என்ற அதன் இணைப்பை பகிர்ந்துள்ளார்.