முதியோர் மருத்துவம்

கனிகளை கவனித்துக்கொள்ள படிப்புகள்

முதியோர் மருத்துவர்கள் ஒரு சமூகத்தில் மிகத் தேவை. அதிலும் முதியோரின் வாழ்க்கை, பல காரணிகளால் அவதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ள காலகட்டத்தில், அத்யாவசியத் தேவையாகிறது.

முதியோர் நோய்கள் எவை

டிமென்ஷியா, கீல்வாதம், வலி நிவாரண கவனிப்பு, ஆஸ்டியோ போரோசிஸ், ஆஸ்டியோ கீழ்வாதம், ரூமெடாய்ட் ஆர்த்ரெடிஸ், பார்க்கின்சன்ஸ் நோய், பெருந்தமனி தடிப்பு, இதய நோய்கள், அதிக ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு ஆகியன.

முதியோர் பிரச்சினைகள்

செயல்பாட்டுத் திறன்கள், தன் சுதந்திரம், வாழ்க்கைத் தரம் ஆகியவையே முதியோருக்கும், முதியோர் மருத்துவருக்கும் பிரச்சினைகள். தங்களைத் தாங்களே பேணுவது, தினப்படி வேலைகளைச் செய்வதுதானே ஒவ்வொரு முதியோருக்கும் கௌரவம்?aged

சில தீர்வுகள்

முதியோரைப் பேணுதல் என்பது ஒரு சமூகக் கடன். ஒரு குடும்பத்தால் எப்போதும் அதைச் சிறப்பாகச் செய்ய முடியுமா என்றால் இல்லை. உதாரணத்திற்கு, வீட்டு மருமகளுக்கு நோய் எனில், அந்த வீட்டு முதியோரை யார் கவனிப்பது? வெகு தொலைவில் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றால் என்ன செய்வது? முதியோர் பாதுகாப்பு, முதியோர் கவனிப்பு, வீட்டிற்கே வந்து கவனிப்பு தருவோர், முக்கியமான பிரச்சினையான காலகட்டத்தில் மட்டும் உதவுவோர், நல்ல பயிற்சி பெற்ற தாதிகள், முதியோர் தடையின்றி நகர, ஓரிடம் செல்ல உதவியான உபகரணங்கள்; இறுதிக் காலத்திலும் உதவும் நலவாழ்வு மையங்கள் மருத்துவ வசதியுடன் சுகாதாரமாகச் செயல்பட வேண்டும்.

முதியோர் மருத்துவக் கல்வி

ஜிரியாட்ரிக்ஸ் எனப்படும் இதில், கார்டியோஜிரியாட்ரிக்ஸ் (முதியோர் இதய நோய்), ஜிரியாட்ரிக் டென்டிஸ்ட்ரி, டெர்மடாலஜி, எமர்ஜென்சி மருத்துவம், டயகனாஸ்டிக் இமேஜிங், நெஃப்ராலஜி, நியூராலஜி, ஆன்கால் ஃபார்மகாலஜி என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதிலெல்லாம் அறுவை சிகிச்சைகள், தனிப் படிப்பு. ஊட்டச்சத்து, மனநலம், பேச்சு-மொழி, பேத்தாலஜி, வலி மேலாண்மை போன்ற பிரிவுகள் உள்ளன.

எங்கே?

* மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் –ஈ ஜிரியாட்ரிக்ஸ் உள்ளது.

* இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக்கழகம் ஒரு டிப்ளமா (கஎ ஈஎ–) நடத்துகிறது.

* ஐ–அ அஓ‡ குடிணடச் ஐணண்ணாடிணாதணாஞு முதியோர் மருத்துவத்தில் முதுநிலை பட்டயப் படிப்பு நடத்துகிறது.

 

 

பேச்சு அவசியம்

கெல்லீஸ் நல்லோர் வட்டம் சார்பாக 1989ல் சென்னை கெல்லீஸ் அரசினர் அன்பு இல்லத்தில் சேவைப் பணிகளைச் செய வேண்டும் என்று போற்றுதலுக்கு உரிய ஸ்ரீ. சிவராம்ஜி வழிகாட்டினார்கள். அன்பு இல்லங்களுக்கு, பணம், பொருள், எனத் தேவைகளைத் தர ஆயிரம் பேர் உள்ளனர். ஆகவே, நமது பணி அன்பு இல்லக் குழந்தைகள், தாத்தாக்கள், பாட்டிகள் இவர்களோடு பேசுதல், அரட்டை அடித்தல், வறண்டு போன அவர்கள் மனத்தில், சந்தோஷம், நம்பிக்கை, உற்சாகம் தருவது, நம் பணியாக இருக்க வேண்டும். வயதான பெரியோர்கள், தங்கள் குடும்பத்தாரைச் சபித்தால் அந்தப் பாவத்திற்கு விமோசனமே இல்லை. ஆகவே, புறக்கணிக்கப்பட்ட இவர்களிடம் பேசுதல் மிக அவசியம்” என்று ஸ்ரீ. சிவராம்ஜி அவர்கள் கூறினார்கள். அவர்தம் வழிகாட்டுதலில் இந்த சேவைப் பணிகள் தொடர்கின்றன.