வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் தனது டுவிட்டரில், “வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையின் இந்தப் புனிதமான தருணம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புதிய ஆற்றலையும் புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்தட்டும். அன்னை வித்யாதாயினி வழிபாட்டுடன் தொடர்புடைய இந்த மங்களகரமான திருநாளில் உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.