இந்திய ஜனநாயகக் கட்சி (ஐ.ஜே.கே) கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்துக்காகவும், ஒற்றுமைக்காகவும் பாடுபட்டுக் கொண்டுள்ளார். அவரது வழிகாட்டுதலில் தமிழக பா.ஜ.க சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நடக்கவிருக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக பா.ஜ.கவின் நிலைப்பாட்டை, இந்திய ஜனநாயகக் கட்சி முழுமனதோடு ஆதரிக்கிறது’ என கூறப்பட்டுள்ளது.